மேலும் அறிய
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு..!
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு, இரண்டு லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண்
Source : whats app
முருக பக்தர்கள் மாநாட்டில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்க வாய்ப்பு - ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இருக்கைகளுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை.
முருக பக்தர்கள் மாநாடு
மதுரை பாண்டிக் கோயில் அம்மா திடல் பகுதியில் இன்று மாலை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ள நிலையில், அதனை பின்பற்றி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 8 மணி வரை மாநாடு நடைபெறவுள்ளது.
இரண்டு லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம்
இந்த மாநாட்டில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைப்பில் பின்னணியில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை இருப்பது போன்ற வடிவில் பிரம்மாண்டமான முருக கடவுள் கையில் வேலுடன் நிற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆயிரம் இருக்கைகளுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு திடலில் தற்காலிக குடிநீர் டேங்குகள் மற்றும் தற்காலிக கழிவறைகள் உள்ளிட்டவைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை 6 மணிக்கு இரண்டு லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம் பாடும் நிகழ்வு நடைபெறவுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு கடந்த 6 தினங்களாக மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் அருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
இதில் மதுரை மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பால்குடம் சுமந்தும், காவடி எடுத்துவரவும் ஏற்பாடு
இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் படி உரிய ஆவணம் உங்களுடன் வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி, பல்வேறு வண்ணங்களுடன் கூடிய அனுமதிசீட்டு அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். என காவல்துறை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டில் தமிழக மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை, மலேசியா ,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தரவுள்ளனர். முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் பால்குடம் சுமந்தும், காவடி எடுத்த படியும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பவன் கல்யாண் வருகை எப்போது
முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று மதுரை வருகிறார். தனி விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையம் வரும் பவன் கல்யாண் மாலை 4 மணி அளவில் திருப்பரங்குன்றம் முருகன், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து நேராக முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்கிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement





















