மேலும் அறிய
செயல்படா நிறுவனங்கள்... உலகின் அவலம் - அதிர்ச்சி பதிலால் மதுரை எம்.பி. காட்டம்
நிறுவனங்கள் எத்தனை மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி எனது கேள்வி இருந்தாலும் அமைச்சரின் பதிலில் எண்ணிக்கை தரப்படவில்லை - மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் விளக்கம்

மதுரை எம்பி சு.வெங்கடேசன்
செயல்படா நிறுவனங்கள் 35% நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்காதவை 30% நிறுவன உலகின் அவலம் - சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி பதில்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தகவல்
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எத்தனை நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அவற்றில் எத்தனை செயல்படுகின்றன? அந்த நிறுவனங்களில் நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்காதவை எத்தனை? ஆண்டறிக்கைகளை சமர்ப்பிக்காதவை எத்தனை? விதிகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை? "ஷெல் கம்பெனிகள்" என்று அழைக்கப்படும் நிழல் நிறுவனங்களாக எத்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? என்றெல்லாம் ஒன்றிய நிறுவன விவகார அமைச்சகத்திடம் நான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு (எண் 66/25.11.2024) இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா அளித்துள்ள பதில் அதிர்ச்சியை தருகிறது.
அமைச்சர் பதில்
நவம்பர் 14, 2024 தேதி அன்று கணக்குப் படி பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 27,75,000. அதில் செயல்படுகிற நிறுவனங்கள் 17,83,418 மட்டுமே. அவற்றில் நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்காத நிறுவனங்கள் 2022 - 23 இல் 5,30,075. ஆண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்காத நிறுவனங்கள் 5,14, 343. விதி மீறல்களுக்காக கம்பெனிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,37, 136 நிறுவனங்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. "ஷெல் கம்பெனிகள்" என்ற வரையறைகள் சட்டத்தில் இல்லாவிட்டாலும் நிதி மடைமாற்றம், மறைத்தல், மோசடி ஆகியவற்றுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
ரெண்டு குளம் பாழு
அமைச்சரின் பதில் குறித்து சு.வெங்கடேசன் கருத்து தெரிவிக்கையில், "35% பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் செயல்படாதவை, செயல்படும் நிறுவனங்களில் 30% நிதி அறிக்கைகளை, ஆண்டறிக்கைகளை சமர்ப்பிக்காதவை என்கிற தகவல்கள் நிறுவன உலகின் செயல்பாடு சீர் கெட்டு இருப்பதன் வெளிப்பாடு ஆகும். நிதி அறிக்கைகளை ஆண்டறிக்கைகளை சமர்ப்பிக்காத நிறுவனங்களின் எண்ணிக்கை 2018 - 19 இல் இருந்து தொடர்ந்து அதிகரித்து 2022 - 23 இல் மூன்று மடங்குகள் உயர்ந்துள்ளன.
"ஷெல்" கம்பெனிகள் குறித்த வரையறை சட்டத்தில் இல்லாவிட்டாலும் நிதி மடைமாற்றம், மறைத்தல், மோசடிகள் நடந்தேறி வருகின்றன என்பதை அமைச்சரின் பதில் ஒப்புக்கொள்கிறது. அத்தகைய நிறுவனங்கள் எத்தனை மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி எனது கேள்வி இருந்தாலும் அமைச்சரின் பதிலில் எண்ணிக்கை தரப்படவில்லை. அந்த எண்ணிக்கை இன்னும் அதிர்ச்சியை தருமோ என்னவோ!" என்று கூறியுள்ளார்.
"ரெண்டு குளம் பாழு, ஒன்னு தண்ணியே இல்லை" என்ற கதையாக இருக்கிறது. ” என குறிப்பிட்டுள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - H.Raja BJP: ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement