மேலும் அறிய
Advertisement
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரையில் பேச்சு.
முன்னதாக நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதம் பாட வேண்டிய மாணவிகள் பதற்றத்தில் தடுமாறி தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியதும், பின்னர் நிறுத்திவிட்டு தேசியகீதம் பாடி பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முறையாக பாடினார்.
மதுரை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம் தொழில்முனைவோர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று இளம் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதம் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய நிலையில் முதலில் மாணவிகள் தடுமாற்றம் அடைந்து தமிழ் தாய் வாழ்த்து பாட துவங்கியதும், அதனை நிறுத்தி விட்டு தேசிய கீதம் பாடப்பட்டது. அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து முறையாக பாடப்பட்டது. பின்னர் ஆளுநருக்கு பாரம்பரிய பொருள்கள் திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், உடன்குடி பனங்கற்கண்டு, மணப்பாறை முறுக்கு, மதுரை ஜிகர்தண்டா, தேன் மிட்டாய், மதுரை மீனாட்சி அம்மன் புகைப்படம் தொழிலதிபர்கள் வழங்கினார்கள்.
தொடர்ந்து தொழில் முனைவோர்கள் மத்தியில் ஆளுநர் ரவி கலந்து உரையாடினார்.
கருத்தரங்கு கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியபோது, “ஏழாயிரம் ஆண்டுகள் பழமையான நகரநாகரிகம் தொட்டு பாரம்பரியம் மிக்க மதுரை மாநகரத்தில் வணிகம் தலைசிறந்து காணப்படுகிறது. அதுவும் தூங்காநகரம் என்று அழைக்கப்படுகிறது. உலக நாடுகள் இந்தியாவின் தலைமை துவத்தை உற்று நோக்கி வருகிறது. இளைய தலைமுறையின் புதிய வியூகங்கள், தொழில்துறையில் முன்னேற்றம் அடைகின்றனர். இளம் தலைமுறையினர் தங்களது திறன்களை மேம்படுத்தி கொள்ளும்பட்சத்தில் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்வதால் மனஅழுத்தம் என்பதை முழுவதும் கட்டுப்படுத்தலாம். தனிமனித முன்னேற்றம் சமுதாய முன்னேற்றமாகி தொடர்ந்து நாட்டின் முன்னேற்ற பாதையாக அமையும். ஆலமரத்தின் சிறு விதை பெரும் மரமாகும் என்பதை போல இளம் வயதினரின் தனிமனித முன்னேற்றம் நாட்டை முன்னேற்றம் அடைய செய்யும்.
அரசின் திட்டங்கள், செயல்முறை உள்ளிட்டவைகள் அடங்கும். பிரதமர் தலைமையில் அறிவிக்கப்படும் வளர்ச்சி திட்டங்கள் சமத்துவ பொருளாதாரம் அடைய வழி வகுக்கும்.
மற்றநாடுகளில் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும், நம்நாட்டில் இல்லை என்ற கேள்விக்கு.?
அக்னி வீரர் திட்டத்தின் மூலம் 6 வருடம் ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பை இந்திய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இளைஞர்கள் இளம் வயதினர் ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், நேர்மையான சிந்தனை வளர்க்கவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் கேலோ இந்தியாவும் இளைஞர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பெரும் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் இளைஞர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது. ரஷ்யா - உக்ரைன், ஹமாஸ் - இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நடைபெறும் போர் பதற்றம் நிகழ்காலத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது குறிப்பாக இந்தியா வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் இருக்கும். இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்” என்று பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai : மஞ்சப்பையோடு வாங்க! பரிசை வாங்கிட்டு போங்க.. உசிலம்பட்டியில் மெகா ஆஃபர்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
ஆட்டோ
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion