மேலும் அறிய
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா... உடனே நடக்கும் அவசர கூட்டம் - அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்குகிறதா?
மண்டலத்தலைவர்களை தொடர்ந்து மேயரும் ராஜினாமா. துணை மேயர் தலைமையில் நாளை மேயர் ராஜினாமா ஏற்பது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டம்.

மதுரை மேயர் ராஜினாமா
Source : whatsapp
100 வார்டுகள் கொண்ட மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தியபோது 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த வரி முறைகேடு முழுவதும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரிய வந்த நிலையில் இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இந்த புகாரின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வரி குறைப்பு செய்வதற்காக அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.
7 பேர் ராஜினாமா
இதுகுறித்து தற்போதைய மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரினை தீவிரமாக விசாரணை நடத்தி முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறிய நிலையில் வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுபடி டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடைபெற்ற நிலையில் வரி முறைகேடு தொடர்பாக முதல் குற்றவாளியாக மாநகராட்சி மேயர் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், வரிவிதிப்புகுழு தலைவரின் கணவர் கண்ணன், செந்தில்பாண்டியன், ரவிச்சந்தி ரன், ஜமால் நஜிம், பாலமுருகன், கருணாகரன், ரவி, முகம்மதுநூர், செந்தில்குமரன், ரெங்கராஜன், கார்த்திக் , சகா உசேன், ராஜேஸ்குமார், சதீஸ், தனசேகரன், உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டு மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட சிலர் ஜாமினில் உள்ளனர்.
இதுகுறித்து தற்போதைய மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரினை தீவிரமாக விசாரணை நடத்தி முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறிய நிலையில் வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுபடி டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடைபெற்ற நிலையில் வரி முறைகேடு தொடர்பாக முதல் குற்றவாளியாக மாநகராட்சி மேயர் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், வரிவிதிப்புகுழு தலைவரின் கணவர் கண்ணன், செந்தில்பாண்டியன், ரவிச்சந்தி
துணை மேயர் நாகராஜன் தலைமையில் கூட்டம்
இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கணவர் வழிமுறைகளை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், மேயர் இந்திராணியின் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பி வந்தனர். வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது முதலமைச்சர் முடிவு எடுப்பார் என பதில் அளித்தார். இந்நிலையில் மேயர் இந்திராணி தனது குடும்ப சூழல் காரணமாக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து மேயர் இந்திராணி வழங்கிய ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக துணை மேயர் நாகராஜன் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆணையாளர் சித்ரா விஜயன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைமைக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி 150 கோடி முறைகேடு விவகாரத்தில் மண்டல தலைவர்கள், குழு தலைவர்களை தொடர்ந்து தற்போது மேயரும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடதக்கது. மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு விவாகரத்தில் மேயர் ராஜினாமா செய்த நிலையில் புதிய மேயர் தேர்வு செய்யப்படுவாரா? இல்லையெனில் துணை மேயர் பொறுப்பு மேயராக நியமிக்கப்படுவாரா? அல்லது ஆணையாளர் மூலமாக மாநகராட்சி நிர்வாகம் நடைபெறுமா என பல்வேறு கேள்விகளும் எழுகிறது. ஏற்கனவே மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில் புதியதாக மேயர் தேர்வு செய்வதில் திமுக தலைமைக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி 150 கோடி முறைகேடு விவகாரத்தில் மண்டல தலைவர்கள், குழு தலைவர்களை தொடர்ந்து தற்போது மேயரும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடதக்கது. மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு விவாகரத்தில் மேயர் ராஜினாமா செய்த நிலையில் புதிய மேயர் தேர்வு செய்யப்படுவாரா? இல்லையெனில் துணை மேயர் பொறுப்பு மேயராக நியமிக்கப்படுவாரா? அல்லது ஆணையாளர் மூலமாக மாநகராட்சி நிர்வாகம் நடைபெறுமா என பல்வேறு கேள்விகளும் எழுகிறது. ஏற்கனவே மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில் புதியதாக மேயர் தேர்வு செய்வதில் திமுக தலைமைக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் மூர்த்தி கை ஓங்குகிறதா?
இருந்த போதிலும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்து வந்த மேயர் இந்திராணி ராஜினாமா செய்த நிலையில் அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், ஏற்கனவே ராஜினாமா செய்த மண்டலம் 1ன் மண்டல தலைவரான வாசுகி சசிகுமாருக்கு மேயர் பதவி வழங்குவதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யார் புதிய மேயர்?
இதற்கிடையே புதிய மேயருக்கு கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர் தளபதி ஆகி யோரின் சிபாரிசுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முன்னாள் மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, கவுன் சிலர்கள் மகாலட்சுமி, ரோகிணி, லட்சிகா ஸ்ரீ, இந்திராகாந்தி பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கட்சியினர் கூறினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















