மேலும் அறிய
'நீங்களே சண்டை போட வைத்து விடுவீர்கள் போல’ - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் வேதனை
உச்ச நீதிமன்றத்தில் வழிபாட்டுத்தலங்கள் குறித்த வழக்கு உயர் நீதிமன்றங்களில் விசாரணை செய்யக்கூடாது என்ற உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதிகள் நிஷா பானு , ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு.

திருப்பரங்குன்றம் கோயில்
திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ளவர்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல, ஏன் இது போன்று வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பாக மனு
ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பிப்ரவரி 4இல் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அனுமதி கோரியிருந்த நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காண்பித்து அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு காவல்துறை தரப்பில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அதில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், அதனை மீறி வருபவர்கள் மீதும், அவர்களுடைய வாகனங்கள் மீதும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. அதோடு மதுரை மாவட்ட ஆட்சியர் சட்ட, ஒழுங்கு பிரச்னையை காரணம் காண்பித்து இரண்டு நாட்கள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆகவே, மதுரை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பிறப்பித்த செய்தி அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும் திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் இதே போல திருப்பரங்குன்றம் மலைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தனியே பல்வேறு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சண்டையிட வைத்து விடுவீர்கள் போல
இந்த வழக்குகள் நீதிபதிகள் நிஷா பானு ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், "இரு தரப்பினரும் திருப்பரங்குன்றம் மலையை உரிமை கோருவதாக சண்டையிட்டு வருவதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொணரலாம்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ளவர்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல, ஏன் இது போன்று செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். மேலும் அங்கு உள்ளவர்கள் சண்டையிடாமல் இருந்தாலும் இது போன்ற வழக்குகளை தாக்கல் செய்து சண்டையிட வைத்து விடுவீர்கள் போல என வேதனை தெரிவித்த நீதிபதிகள்.
தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்
அப்போது, வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்தவர்கள் தரப்பில், "வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது மேலும் வழிபாட்டுத்தலங்கள் குறித்து வழக்குகளை விசாரணை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க முடியாது என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழிபாட்டுத்தலங்கள் குறித்து உச்ச நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். மேலும், தொல்லியல் துறை குறித்து வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உரிய மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஆடு வெட்டப்பட்டதா?” உண்மை என்ன ?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















