மேலும் அறிய

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது எனவும் தவெக அறிவித்துளது.

மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட கரூர் மக்கள் சந்திப்பில் கூட்ட நெருக்கடியில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் களம் இறங்கியுள்ளார் விஜய், அந்த வகையில் நாளை (09.12.2025, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர்  விஜய்  'புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையடுத்து காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக தவெக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் 10 கட்டளையிட்டுள்ளது. 

தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்

  • கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள். உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர். நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  •  நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது. போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
  •  காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத் தோழர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  •  வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள பாண்டி மெரினா பார்க்கிங். பழைய துறைமுகம் மற்றும் இந்திராகாந்தி ஸ்டேடியம் பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகணங்களை நிறுத்தக் கூடாது.
  •  மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால். அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
  •  எளிதில் அடையாளம் காணும் வகையில் கழக நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  •  மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ. அலங்கார வளைவுகளோ. கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
     
  • மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள். காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ். வேன். ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆசியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள் (Lan Proses) மின் கம்பங்கள் iss), மின்மாற்றிகள் (Tranfenner) ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள். தடுப்புகள் அமைக்கப்பட்டிருத்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது. அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும். பொது மக்களுக்கும். வாகன ஒட்டிகளுக்கும். பள்ளி மாணாக்கர்களுக்கும். பெண்கள். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
  •  தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும்.

நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India Iran Trade: இந்தியா-ஈரான் வர்த்தகம்.. ஏற்றுமதி, இறக்குமதியாகும் பொருட்கள்? சபாஹர் துறைமுகம் தெரியுமா?
India Iran Trade: இந்தியா-ஈரான் வர்த்தகம்.. ஏற்றுமதி, இறக்குமதியாகும் பொருட்கள்? சபாஹர் துறைமுகம் தெரியுமா?
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
Top 10 News Headlines: அமைச்சர் துரைமுருகனுக்கு விருது, பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட், ட்ரம்ப்புக்கு ஈரான் வார்னிங் - 11 மணி செய்திகள்
அமைச்சர் துரைமுருகனுக்கு விருது, பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட், ட்ரம்ப்புக்கு ஈரான் வார்னிங் - 11 மணி செய்திகள்
Hyundai Staria EV: கவலைய விடுங்க..! மின்சார எடிஷனில் 9 சீட்டர், 400KM ரேஞ்ச் - 84 kWh பேட்டரியுடன் ஹுண்டாயின் எம்பிவி
Hyundai Staria EV: கவலைய விடுங்க..! மின்சார எடிஷனில் 9 சீட்டர், 400KM ரேஞ்ச் - 84 kWh பேட்டரியுடன் ஹுண்டாயின் எம்பிவி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Iran Trade: இந்தியா-ஈரான் வர்த்தகம்.. ஏற்றுமதி, இறக்குமதியாகும் பொருட்கள்? சபாஹர் துறைமுகம் தெரியுமா?
India Iran Trade: இந்தியா-ஈரான் வர்த்தகம்.. ஏற்றுமதி, இறக்குமதியாகும் பொருட்கள்? சபாஹர் துறைமுகம் தெரியுமா?
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
Top 10 News Headlines: அமைச்சர் துரைமுருகனுக்கு விருது, பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட், ட்ரம்ப்புக்கு ஈரான் வார்னிங் - 11 மணி செய்திகள்
அமைச்சர் துரைமுருகனுக்கு விருது, பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட், ட்ரம்ப்புக்கு ஈரான் வார்னிங் - 11 மணி செய்திகள்
Hyundai Staria EV: கவலைய விடுங்க..! மின்சார எடிஷனில் 9 சீட்டர், 400KM ரேஞ்ச் - 84 kWh பேட்டரியுடன் ஹுண்டாயின் எம்பிவி
Hyundai Staria EV: கவலைய விடுங்க..! மின்சார எடிஷனில் 9 சீட்டர், 400KM ரேஞ்ச் - 84 kWh பேட்டரியுடன் ஹுண்டாயின் எம்பிவி
Gold Silver Rate Jan.13th: இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல.! புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம் விலை; இன்று எவ்வளவு.?
இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல.! புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம் விலை; இன்று எவ்வளவு.?
PM Modi Campaign: மதுரை இல்லையாம்..! தலைநகருக்கு மாறிய பொதுக்கூட்டம் - மோடியின் ப்ளான் என்ன? கூட்டணி சாதிக்குமா?
PM Modi Campaign: மதுரை இல்லையாம்..! தலைநகருக்கு மாறிய பொதுக்கூட்டம் - மோடியின் ப்ளான் என்ன? கூட்டணி சாதிக்குமா?
Tamilnadu Roundup: முதலமைச்சர் மடல், விஜய்க்கு மீண்டும் சம்மன்?, சென்னையில் பிரதமர், மேலும் உயர்ந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் மடல், விஜய்க்கு மீண்டும் சம்மன்?, சென்னையில் பிரதமர், மேலும் உயர்ந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Pongal Gift: பொங்கல் பரிசு ரூ. 3000 வாங்க இன்று கடைசி நாள்.! மிஸ் பண்ணவங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.?
பொங்கல் பரிசு ரூ. 3000 வாங்க இன்று கடைசி நாள்.! மிஸ் பண்ணவங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.?
Embed widget