Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Dec 8th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்
“SIR பணிகளை பொறுத்த வரை நாம் பாதி கிணறுதான் தாண்டி உள்ளோம். வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்” திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முடங்கிய விமான சேவை
சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 7வது நாளாக பாதிப்பு!
நிர்வாக காரணமாக இன்று 38 புறப்பாடு, 33 வருகை என 71 விமான சேவை ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தகவல்.
செல்லப்பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில் இதுவரை 96,056 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 49,347 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தகவல். கடந்த 2023 ஆகஸ்ட் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.
நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் SIR
தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் நாளை விவாதம் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விவாதத்தை தொடங்குவார்.
மொத்தமாக 10 மணிநேரம் திட்டமிடப்பட்டுள்ள விவாதம் முடிந்த பிறகு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிப்பார். இந்த விவகாரம் குறித்து 10ம் தேதி மாநிலங்களவையில் விவாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
திலீப்பிற்கு எதிரான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
கேரளா: பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது எர்ணாகுளம் நீதிமன்றம். 2017ல் நடந்த இச்சம்பவத்தில், நடிகை மீது இருந்த முன்பகையில் | திலீப் தூண்டுதலின்பேரில் இக்கொடுமை நிகழ்த்தப்பட்டதாக வழக்குப் பதியப்பட்டு 251 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்தியா வரும் ஜெலன்ஸ்கி
ரஷ்ய அதிபர் புதினின் இந்தியா வந்து சென்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் ஜனவரி டெல்லி வருகிறார். பயண தேதி இந்திய -உக்ரைன் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவிக்கப்படும். புதின் இந்தியா வருகையின்போது உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர்களே அத்துமீறிய கொடூரம்
திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலை., மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பேராசிரியர் லக்ஷ்மன்குமார் சஸ்பெண்ட். மாணவியின் புகாரில் நடவடிக்கை.
லஷ்மன்குமார் உடன் மாணவி தனியாக இருப்பதை மொபைலில் படம் பிடித்து, அவரை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் மற்றொரு பேராசிரியர் சேகர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸ் விசாரணை.
சிறையில் அராஜகம்
கர்நாடகாவின் கார்வார் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் மற்றும் பிற கடத்தல் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்கச் சென்ற சிறை காவலர்களைத் சரமாரியாக தாக்கிய 2 கைதிகள் மீது வழக்குப் பதிவு. இவர்கள் கொள்ளை, கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் என போலீசார் தெரிவிப்பு!
வெங்கடேஷ் பிரசாத் வெற்றி
கர்நாடக கிரிக்கெட் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத். குன்ஹா ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி சின்னசாமி மைதானத்தின் பெருமையை மீட்டெடுப்பது, பெங்களூவில் மீண்டும் சர்வதேச போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்திருந்தார்.
இங்கிலாந்தின் சோகக் கதை
நடப்பாண்டு ஆஷஷ் தொடரின் இரண்டாவது போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்,ஆஸ்திரேலிய மண்ணில் 2013ல் இருந்து தற்போது வரை நடந்த 17 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட இங்கிலாந்து வென்றதில்லை என்ற மோசமான சாதனை உருவாகியுள்ளது.





















