மேலும் அறிய
Advertisement
திருகார்த்திகை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு - மல்லிப்பூ கிலோ எவ்வளவு தெரியுமா?
திருகார்த்திகையை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து, மழையிலும் மக்கள் வாக்கிச் செல்கின்றனர்.
கார்த்திகை தீபம் 2024 (karthigai deepam 2024): தமிழ் மாதங்களில் சிறப்பான மாதமாக கார்த்திகை மாதமாக கார்த்திகை தீபம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கார்த்திகை மாதம் வரும் விழாக்களில் முக்கிய விழாவாக திருக்கார்த்திகை தீபம் உள்ளது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பண்டிகைகள் இருந்தாலும், கோயில்கள் மற்றும் வீடுகளில் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாக திருக்கார்த்திகை திருவிழா உள்ளது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிவன் கோயில்கள் மற்றும் முருகர் கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். திருகார்த்திகை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி கொண்டாட்டம்
அதேபோன்று திருக்கார்த்திகை தீபத்தன்று வீடுகளிலும் தீபம் ஏற்றி, முருகருக்கு படையல் போட்டு சாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு, வீடு முழுவதும் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதேபோன்று பல்வேறு கோயில்களிலும் சிறிய அளவில் தீபங்கள் ஏற்றுவது, கோயில்களில் மலை மீது தீபம் ஏற்றுவது என பல்வேறு வகைகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்
பூக்களின் விலை உயர்ந்துள்ளது
கடந்த சில நாட்களாகவே மழைப்பொழிவு மற்றும் பனி காரணமாக மல்லிகை பூ மற்றும் பிச்சிப் பூ முல்லை பூ ஆகியவற்றின் வரத்து குறைவால் பூக்களின் விலையானது உயர்ந்துள்ளது. மேலும் பூக்களின் வரத்து குறைவாலும் திருக்கார்த்திகையை முன்னிட்டும் மல்லிகைப்பூ 2000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1000 ரூபாய்க்கும், முல்லை பூ 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1500 ரூபாய்க்கும், சாமந்திப்பூ 120 ரூபாய்க்கும், சம்மங்கி 120 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 500 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாய்க்கும், ரோஸ் பெரிய மாலை 250 சிறியது 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சம்பங்கி பெரிய மாலை 250க்கும் சிறியது 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. செண்டுபூ மாலை பெரியது 1500 ரூபாய்க்கும், வெட்டிவேர் மாலை 1500 ரூபாய் முதல் 2500 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sanjeev Goenka : ”ஒரு வார்த்தை கூட பேசல! இனியும் பேச மாட்டாரு” தோனி குறித்து மனம் திறந்த கோயங்கா..
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
விளையாட்டு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion