மேலும் அறிய
Advertisement
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
ஒத்தக்கடை பகுதியில் பட்டப் பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை காதலிக்க வற்புறுத்தி இளைஞர் ஒருவர் தனியார் ஜெராக்ஸ் கடையில் பணியாற்றும் பெண்ணை கடுமையாக தாக்கும் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெராக்ஸ் கடைக்கு சென்று காதலிக்க வற்புறுத்தியுள்ளார்
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது சக்கரா நகர். இங்குள்ள தனியார் ஜெராக்ஸ் கடையில் இளம் பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அதே ஒத்தக்கடையைச் சேர்ந்த சித்திக் (25) என்பவர் பல நாட்களாக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை தன்னை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறு (நவம்.17) அதே ஜெராக்ஸ் கடைக்கு சென்று காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு சித்திக்கிடம் பாதிக்கப்பட்ட பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சித்திக், அந்த பெண்ணை கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளம் பெண் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளோர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது நலமாக இருப்பதாகவும், தாக்கிய இளைஞர் தலைமறைவாகிவிட்டதால் அவரை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் சரமாரியாக தாக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒத்தக்கடை பகுதியில் பட்டப் பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Kanguva : சூர்யாவை பைத்தியக்காரன் என திட்டிய ரசிகர்..கொலை மிரட்டல்வரை சென்ற சூர்யா ரசிகர்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion