Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah : ”நான் பொறுப்பை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்” மும்பை அணியில் பாண்டியா உடனான மோதலுக்கு பும்ரா மறைமுக விளக்கம்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ் தொடர் நாளை தொடங்க உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தனது மகன் பிறந்ததை அடுத்து அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால் அவருக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா அணியை வழி நடத்தவுள்ளார்.
கோப்பையுடன் கேப்டன்கள்:
இன்று இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பும்ரா கருத்து:
இதன் பிறகு பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ரோஹித் சர்மா இல்லாத நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா செய்தியாளர்களை சந்தித்தார் அதில், "நான் அதை ஒரு பதவியாக பார்க்கவில்லை. நான் பொறுப்பை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு குழந்தையாக இருந்ததில் இருந்து கடினமான வேலையைச் செய்ய விரும்பினேன். நீங்கள் எப்போதும் கடினமான சூழ்நிலையில் சந்திக்க தயராக இருக்க வேண்டும். ரோஹித் இருக்கும் போதோ அல்லது விராட் இருந்த போதும், நான் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சித்தேன், மேலும் நான் மூத்த வீரரான போதும், புதியவர்கள் அணிக்கு வரும் போது அதையே அவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன், நான் கற்றுக்கொண்டதை இந்த வழியில் பார்க்க ஆரம்பித்தேன், நான் குழந்தையாக இருக்கும் போதே எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினேன். இந்தியா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டை வெகு சிலரே விளையாடியுள்ளனர். மற்றும் கேப்டன் பொறுப்பும் வெகு சிலருக்கு கிடைத்துள்ளது, அந்த வெகு சிலரில் எனக்கு கிடைத்தது என்பது நான் செய்த பாக்கியம் மற்றும் நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பும்ரா கூறியுள்ளார்.
இதையும் படிங்க:Border Gavaskar Trophy: அலாரம் வைக்க ரெடியா.. நாளை தொடங்கும் BGT தொடர்.. நேரலையை எங்கு காணலாம்?
பாண்ட்டியாவுடன் மோதல்:
கடந்த ஐபிஎல் சீசனின் போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அணியின் கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா இருப்பார் என்று பேசப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்டியாவிடம் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது அணியின் சீனியர் வீரரக்ளை கடுப்பிற்கு உள்ளாக்கியது. மேலும் பும்ராவும் அவ்வப்போது தனக்கு கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்படாதது குறித்து மறைமுகமாக இன்ஸ்டாகிராமில் சில நேரங்களில் அமைதியாக இருப்பதே நல்லது என்று தனக்கு கேப்டன்சி கிடைக்காதது குறித்து மறைமுகமாக தனது விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது “ நான் பொறுப்பை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு குழந்தையாக இருந்ததில் இருந்து கடினமான வேலையைச் செய்ய விரும்பினேன். நீங்கள் எப்போதும் கடினமான சூழ்நிலையில் சந்திக்க தயராக இருக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார். இதன் மூலம் பாண்ட்டியாவுடனான மறைமுக மோதலுக்கு காரணம் இது தான் என்று தற்போது பும்ராவின் பேச்சு மூலம் தெளிவாக தெரிகிறது.