மேலும் அறிய
Advertisement
தேனீ வளர்ப்பு தொழில் துவங்க ஆசையா? .... இலவசமா கற்றுக்கொள்ள இதோ வழி....!
தேனீ வளர்ப்பில் ஆசையுள்ள நபர்கள் மாநில அளவில் இலவச கருத்தரங்கில் கலந்துகொள்ளவும், மதுரை மாவட்ட அளவில் இலவச பயிற்சியும் பெற அரிய வாய்ப்பினை பயன்படுத்தலாம். அது குறித்து முழுவிபரம் உள்ளே.
தேனீ வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டலாம்
விவசாய உபதொழிலாக பார்க்கப்படும் தேனீ வளர்ப்பு, ஒரு பண்ணைசார் தொழிலாகும். சிறிய அளவில் தொடங்கப்படும் தேனீ வளர்ப்பு பிற்காலத்தில் இனிப்பான லாபத்தை அள்ளித் தருகிறது. போதிய பயிற்சி அனுபவம் கிடைக்கும் போது, கண்டிப்பாக தேனீ வளர்ப்பில் வெற்றியடைய முடியும். அதே போல் பொழுது போக்கிற்காகக் கூட நாம் தேனீ வளர்க்கும் போது., நமக்கு சுத்தமான தேனையும், மனநிறைவையும் கொடுக்கும்.
தேனீ வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் தேனீ வளர்ப்பு வெற்றிகரமான தொழிலாக மாறி வருகிறது தேனீ பண்ணை அமைக்க தேர்வு செய்யும் இடம் தேனீக்களுக்கு, தேனீ வளர்ப்போர்க்கும் ஏற்றதாக அமைத்தல் அவசியம். தேனீ கூட்டங்கள் எங்கெங்கு இயற்கையில் அதிகமாக காணப்படுகிறதோ, அந்த இடங்களில் பொதுவாக தேனீக்கள் வளர்ப்பதற்கு ஏற்றவை. தேனீக்களை வளர்க்க விவசாயம் நிலம் தேவையில்லை. தேனீக்களை வளர்க்க உகந்த பருவநிலை நிலவும் இடங்களை தெரிவு செய்ய வேண்டும். இப்படி பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினால் தேனீ வளர்ப்பில் வெற்றிக் கொடி நாட்டலாம் என்கின்றனர் துறைசார்ந்த வல்லுநர்கள்.
தேனீ வளர்ப்பு குறித்து மாநில அளவில் கருத்தரங்கு
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பூச்சியியல் துறையில் வருகின்ற நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மாநில அளவிலான 2 நாட்கள் தேனீ வளர்ப்பு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் தேனீ வளர்ப்பாளர்களின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது. மேலும் கருத்தரங்கில் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனீக்களின் வகைகள், தேன் எடுக்கும் முறைகள், தேனில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, தேனை சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் மற்றும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள முன்னோடி தேனீ வளர்பாளர்கள் பங்கு பெற்று உரையாற்ற உள்ளனர். எனவே இந்த வாய்ப்பினை தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், பெ.சந்திரமணி தெரிவித்துள்ளார். இந்த கருத்தரங்குற்கு தேசிய தேனீ வாரியம், புது டெல்லி நிதி உதவி செய்கிறது. 200 பேர் பங்கு பெற்று பயன் அடையலாம். இப்பயிற்சியில் முன்பதிவு செய்து கொள்ள பூச்சியியல் துறை இணை பேராசிரியர் முனைவர் கி.சுரேஷ் அவர்களின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். முன்பதிவு அவசியம், அதற்கு 99652 88760 - என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
தேனீ வளர்ப்பு மாவட்ட அளவிலான இலவச பயிற்சி
அதே போல் மதுரை மாவட்ட அளவில் வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள்,தொழில் முனைவோர், பெண்களுக்கு தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் அளிக்கப்படுகிறது. வரும் டிசம்பர் 2 முதல் 7 வரை அளிக்கப்படும் பயிற்சிக்கு குறைந்தது ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 40 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மதுரை மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் மட்டும் முன்பதிவுக்கு - 9965288760 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion