Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் தேதி மற்றும் நேரம் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கலப்புப் பொருட்கள் மையம் (Centre for Composite Materials - CCM), "கண்ணாடி இழை வலுவூட்டப்பட்ட கலப்புப் பொருட்கள் காற்றாலை பிளேடுகள் மற்றும் அவற்றின் மறுபயன்பாட்டு சாத்தியக்கூறுகள்" (Glass Fiber Reinforced Composite for Wind Blades and their Reuse Feasibility) என்ற TANII- Tamil Nadu Innovative Initiatives திட்டத்திற்காக பல்வேறு தற்காலிக பணி இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணியிட விவரங்கள் மற்றும் மாத ஊதியம்
-
புராஜெக்ட் அசோசியேட் I: 7 காலியிடங்கள்.
-
தகுதி: M.E./ M.Tech./ M.Sc. (பொறியியல்/தொழில்நுட்பம்/அறிவியல்).
-
மாத ஊதியம்: ரூ.35,000.
-
புராஜெக்ட் அசிஸ்டென்ட் (PG இன்டர்ன்): 4 காலியிடங்கள்.
-
தகுதி: முதுகலை இறுதியாண்டு மாணவர்கள்.
-
மாத ஊதியம்: ரூ.7,750.
-
புராஜெக்ட் அசிஸ்டென்ட் (UG இன்டர்ன்): 5 காலியிடங்கள்.
-
தகுதி: இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள்.
-
மாத ஊதியம்: ரூ.5,000.
-
புராஜெக்ட் டெக்னீசியன்: 5 காலியிடங்கள்.
-
தகுதி: டிப்ளமோ/ ஏதேனும் பட்டப்படிப்பு.
-
மாத ஊதியம்: ரூ.20,000.
-
புராஜெக்ட் அசிஸ்டென்ட் (நிர்வாகம்): 1 காலியிடம்.
-
தகுதி: இளங்கலைப் பட்டம் + 5 வருட நிர்வாக அனுபவம் + கணினித் திறன்.
-
மாத ஊதியம்: ரூ.24,000.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31, 2025
-
நேர்காணல் தேதி: ஜனவரி 8, 2026
-
தேர்வு அறிவிப்பு: ஜனவரி 13, 2026
-
பணியில் சேரும் தேதி: பிப்ரவரி 02, 2026
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் அசல் நகலுடன் (படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது), ஒரு பக்க சுய விவரம் (CV) மற்றும் சான்றிதழ்களின் நகல்களை அஞ்சல் மூலம் "The Director, Centre for Composite Materials (CCM), Anna University, Chennai - 600 025" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அத்துடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலையும், தொடர்புடைய மற்ற ஆவணங்களையும் ccmdirector@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2025 டிசம்பர் 31 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் தேதி மற்றும் நேரம் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும். நேர்காணலுக்கு வரும்போது அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். நேர்காணலுக்கு பயணப்படி (TA/ DA) வழங்கப்படாது.
தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் பொருத்தமான வேட்பாளர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் Ph.D. பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த பதவிகள் தற்காலிகமானவை மற்றும் செயல்திறனைப் பொறுத்து அவ்வப்போது மாற்றி அமைக்கப்பபடும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: ccmdirector@annauniv.edu
தொலைபேசி எண்: 044-2235 7602, 9840203400






















