மேலும் அறிய

மதுரை விமான நிலையத்தை புறக்கணிக்கும் ஒன்றிய அரசு: ஆசியான் ஒப்பந்தத்தில் வஞ்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

சிறப்பு ஆசியான் இருதரப்பு ஒப்பந்தத்தில் மதுரை விமானநிலையத்தை இணைக்க ஒன்றிய அரசு மறுப்பு. - மதுரை எம்.பி. குற்றச்சாட்டு.

மதுரை விமான நிலையத்தைப் புறக்கணிக்கிறது. ஒன்றிய அரசின் வஞ்சகம் நிறைந்தஇச்செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.” எனவும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு கடிதம்

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி...” மதுரை விமான நிலையத்தை சிங்கப்பூர், மலேசியா உள்ளடக்கிய ஏழு ஆசியான் நாடுகளுடன் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு இருதரப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்க்க வேண்டும் என ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களுக்கு கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் வழியுறுத்தியிருந்தேன். இந்த கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் - சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக 18 இந்திய விமான நிலையங்களை சுற்றுலா நகரமாக ஏழு ஆசியான் நாடுகளுக்கு அறிவித்து மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமானது ONE-TIME POLICY DECISION எனவும், தற்போது மதுரையை இந்த ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்ப்பதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனவும், இந்திய விமான நிறுவனங்கள் விரும்பினால் மதுரையிலிருந்து ஆசியான் நாடுகளுக்கு தங்கள் விமானங்களை இயக்க எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும், ஆனால் அந்த முடிவு இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் லாபம் மற்றும் வழித்தடத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு அவர்களே முடிவு செய்ய முடியும் என்றும் அரசு அவர்களின் விமான இயக்கத் திட்டங்களில் தலையிட முடியாது எனவும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 

இந்திய அரசாங்கத்தால் அது நிராகரிக்கப்பட்டது. 
 
மதுரை மண்டலம் இயற்கையாகவே தெற்காசிய நாடுகளுடன் கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. அங்கு வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் தென் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலானோர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். மதுரைக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடையேயான சுற்றுலா வாய்ப்புகளும் ஏராளம். இத்தனை அம்சங்களையும் அறிந்து தான் மலேசியாவின் ஏர் ஆசியா 2003-ம் ஆண்டு முதலே யும், பாட்டிக் ஏர் (மலிண்டோ) 2014-ம் ஆண்டும் மதுரைக்கு தங்களுக்கு நேரடி விமான சேவையை இயக்க முன்வந்தனர். 2013-ம் ஆண்டு நடந்த இருதரப்பு ஒப்பந்தங்களின் போது. சிங்கப்பூர் அரசாங்கமே அதிகாரப்பூர்வமாக மதுரை மற்றும் புனே நகரங்களை POC- யாக சேர்த்து தங்கள் நிறுவனங்கள் நேரடி சேவைகளைத் தொடங்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் இந்திய அரசாங்கத்தால் அது நிராகரிக்கப்பட்டது. 
 
ஆசியான் இருதரப்பு சலுகைகளைப் பயன்படுத்தவில்லை
 
மேலும் 2014-15 காலக்கட்டங்களில் ஏர் அரேபியா, ஃப்ளை துபை போன்ற சில வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களும் மதுரைக்கு தங்களது விமானங்களை இயக்க ஆர்வம் காட்டின. 
ஆனால் இவை அனைத்தும் இருதரப்பு ஒப்பந்தங்களில் மதுரை இடம் பெறாத ஒரே காரணத்தால் நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போனது. ஒருபக்கம் இந்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மதுரை விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு எதிராகவே உள்ளது. மறுபுறம் ஆசியான் சிறப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரங்கள் என சேர்க்கப்பட்டுள்ள 18 இந்திய நகரங்களை ஆராய்ந்தோமானால்... கஜுராஹோ இன்றுவரை முழுமையான உள்நாட்டு விமான நிலையமாக உள்ளது. வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தில் ஒரு உள்நாட்டு விமான நிலையத்தை POC ஆகச் சேர்ப்பதில் எந்தப் பயனும் இல்லை...ஏனெனில் சுங்க மற்றும் குடியேற்ற வசதிகள் இல்லாமல் சர்வதேச விமான நடவடிக்கைகளை அங்கு கையாள முடியாது. ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து, போர்ட்-பிளேர், அவுரங்காபாத் போன்ற சில விமான நிலையங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசியான் இருதரப்பு சலுகைகளைப் பயன்படுத்தவில்லை. இருதரப்பு ஒப்பந்தங்கள் ஒரு கொள்கை முடிவு என்று இந்திய அரசு கூறுகிறது, ஆனால் அந்த கொள்கையே நியாயமற்றதாக தெரிகிறது மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. மதுரையின் மீது ஆர்வமுள்ள வெளிநாட்டு விமான நிறுவனங்களை பறக்க அனுமதிக்காமல், இந்திய விமான நிறுவனங்கள் மதுரை போன்ற வளரும் விமான நிலையங்களிலிருந்து சர்வதேச விமானங்களை இயக்க வேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கான செயல்பாட்டுச் செலவுகள் இந்திய விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளதால் இது அவ்வளவு எளிதானது அல்ல.
 
கடுமையாக கண்டிக்கத்தக்கது
 
வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் போன்ற தங்கள் HUB வழியாக உலகம் முழுவதும் பயணத்திட்டங்களை மேற்கொள்கின்றன...அதிகளவில் லாபம் ஈட்டுகின்றன..,ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் பெரும்பாலும் O&D போக்குவரத்தையே சார்ந்துள்ளது. ஆர்வமுள்ள வெளிநாட்டு விமான நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதும், தயங்கும் இந்திய விமான நிறுவனங்கள் மதுரை விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதை எதிர்பார்ப்பதும்/அதற்காக காலவரையற்று காத்திருப்பதும், மதுரையை ஒவ்வொரு ஆண்டும் நஷ்டம் விளைவிக்கும் AAI விமான நிலையங்களின் பட்டியலில் வசதியாக சேர்க்கிறது..இது எந்த வகையில் நியாயம்..? இந்தக் கொள்கை முடிவு என்பது முற்றிலும் நியாயமற்றது. இது ஒரு முறை முடிவு செய்யப்படும் கொள்கை முடிவாக இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் இந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகாவது இந்த சிறப்பு ஆசியான் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். சர்வதேச போக்குவரத்த்திற்கு பயன்படாத கஜுராஹோ போன்ற உள்நாட்டு விமான நிலையமும்...இத்தனை வருடங்களாக ASEAN ஒப்பந்தச் சலுகைகளைப் பயன்படுத்தாத அவுரங்காபாத், போர்ட் ப்ளைர் போன்ற விமான நிலையங்களுக்கும் இந்த ஒப்பந்தத்தால் எந்த பயனும் இல்லாதபோது ..அதற்கு பதிலாக தெற்காசிய நாடுகளுடனான நேரடி விமானங்களுக்காக பல வருடங்களாகக் காத்திருக்கும் மதுரை போன்ற தகுதியான விமான நிலையங்களை இந்த ஆசியான் ஒப்பந்தத்தில் POC- யாக சேர்ப்பது தானே நியாயமாக இருக்க முடியும்? தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மதுரையை ஆசியான் சிறப்பு ஒப்பந்தத்தில் ஒரு சுற்றுலா நகரமாக சேர்க்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். மதுரைக்கு மெட்ரோ திட்டம் கிடையாது என மறுக்கிறதுஒன்றிய அரசு, பிற மாநிலங்களில் அடிப்படையாக இருக்கவேண்டிய வசதிகள் கூட இல்லாத சிறிய விமான நிலையங்களைஊக்குவிக்கிறது, ஆனால், மதுரை விமான நிலையத்தைப் புறக்கணிக்கிறது. ஒன்றிய அரசின் வஞ்சகம் நிறைந்தஇச்செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.” எனவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget