Madurai Train Fire: லக்னோ ரயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் - பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி பேட்டி
தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் சிலிண்டர் வெடித்துள்ளது. லக்னோவில் இருந்தும் ரயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி பேட்டி.
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து கடந்த 14-ஆம் தேதி 63 பயணிகளுடன் தென்னந்தியாவில் ஆன்மீக சுற்றுலாவிற்காக புறப்பட்ட ரயில் பெட்டியானது மதுரையில் நேற்று முன்தினம் காலை ரயில்வே நிலையம் அருகே போடிலைன் யார்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தது.
மதுரை ரயில் விபத்து:
அப்போது ரயிலில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி டீ போட முயன்றபோது சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி 9 பேர்கள் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர் மேலும் 8 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்நிலையில் மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினார் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இரண்டாம் நாள் விசாரணையில் ரயில்வே நிலைய அதிகாரிகள் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் தீயணைப்புத் துணைநர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாகவும் தகவல். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்; மேலும் இருவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் #madurai #fire #train @abpnadu pic.twitter.com/o9lFy9xjXb
— arunchinna (@arunreporter92) August 26, 2023
லக்னோ அதிகாரிகளிடமும் விசாரணை:
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சவுத்ரி இதுவரை 20 நபர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனை செய்யவில்லை என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நாகர்கோவிலில் காலியான சிலிண்டரை மீண்டும் நிரப்பி உள்ளனர், சிலிண்டர் வெடிப்பு தான் விபத்திற்கான பிரதான காரணம் என தெரியவந்துள்ளது, கழிவறை அருகே வைக்கப்பட்டிருந்த போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதனால் தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் சிலிண்டர் வெடித்துள்ளது. லக்னோவில் இருந்தும் ரயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Watch Video: முதல் சுற்றில் சொதப்பல்.. மூன்றாவது சுற்றில் முத்திரை.. கெத்துக்காட்டி தங்கத்தை தட்டித்தூக்கிய நீரஜ் சோப்ரா.