கொடைக்கானலில் நோ பிளாஸ்டிக் செயல்பாடு.. நகராட்சி நிர்வாகம் அதிரடி..!
கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனத்தில் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்படும் குடிநீர் பாட்டில்கள். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை.
கொடைக்கானலுக்கு கார் , இருசக்கர வாகனத்தில் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்படும் குடிநீர் பாட்டில்களால் சுற்றுச்சூழலுக்குக் கேடு. கொடைக்கானலில் நோ பிளாஸ்டிக் நகராட்சி நிர்வாகம் அதிரடி..!
கொடைக்கானலில் வனத்துறையினரின் சோதனையை மீறி 1 லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலை சுற்றுலா பயணிகள் கொண்டுவருவது அதிகரித்து வருகிறது. கொடைக்கானலில் ஒரு லிட்டர், 2 லிட்டர் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், சுற்றுலா பயணிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறியும் விற்பனை செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது கோடை வெயிலை சமாளிக்க கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது,
பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் வத்தல குண்டு மற்றும் பழநியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலையடிவாரப் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து, சுற்றுலா பயணிகள்கொண்டு வரும் 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கல்வி சான்றிதழ் விவகாரம்.. பிரதமர் மோடியை கலாய்த்து சுப்பிரமணியம் சுவாமி ட்வீட்..!
இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினரின் சோதனையை மீறி தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருவது தொடர்கிறது. அதனால் கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பேநகராட்சி சார்பில் சுங்கச் சாவடியில் வைத்து சுற்றுலா மற்றும் சரக்கு வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. அதில் 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில்கள் இருந்தால் பறிமுதல் செய்து வருகின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் மலையடிவாரத்தில் சோதனை செய்தாலும் தண்ணீர் தேவைக்காக சுற்றுலா பயணிகள் மறைத்து வைத்துக்கொண்டு வருகின்றனர். பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டை தடுக்க சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்