Keezhadi Excavation: ‛உருக்காலை மூலம் தயாரான இரும்பு பொருட்கள்’ கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்!
‛கி.மு 2600 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு உருக்காலைகள் முலம் இரும்பு பொருட்களை உருக்கி பல்வேறு பொருட்களாகப் பயன்படுத்தி இருப்பது தெரிய வருகிறது’
கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல்துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அழகாய்வுப் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பெரிதும், சிறிதுமாக மூன்று இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடி, கொந்தகை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து அகழாய்வுப் பணியை அரசு செய்து வருகிறது.@UpdatesMadurai | @Act4madurai pic.twitter.com/miz4Vs5r1K
— Arunchinna (@iamarunchinna) May 25, 2022
இந்நிலையில் கீழடியில் 5 குழிகள் தொண்டப்பட்டு அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு குழியில் சுமார் 4அடி ஆழத்தில் தோண்டும் போது பெரிதும் சிறிதுமாக 3 இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன.
இதன் மூலம் நம் முன்னோர்கள் கி.மு 2600 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு உருக்காலைகள் முலம் இரும்பு பொருட்களை உருக்கி பல்வேறு பொருட்களாகப் பயன்படுத்தி இருப்பது தெரிய வருகிறது என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த இரும்பு பொருட்களை தொடர்ந்து ஆய்வு செய்யும் பட்சத்தில் இதனுடைய முழு விவரங்களும் தெரிய வரும் என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் மேலும் இதனைத் தொடர்ந்து கீழடி , அகரம் கொந்தகை ஆகிய இடங்களில் தொடர்ந்து அகழாய்வுப் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது. கீழடியில் இரும்பு பொருட்கள் கிடைத்தற்கு தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
’ இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ’ - அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவு குறித்த சர்ச்சை ; மகளிர் குழு ஒப்பந்தம் ரத்து செய்ய பரிந்துரை !