திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: அதிர்ச்சி தரும் காரணம்!
தனியார் வாகனங்களில் அதிக வேகத்தில் பயணிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புகள் , முன்னால் செல்லும் வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று முன்தினம் உள்ள பாளையம் நான்கு வழிச்சாலை பகுதியில் சாவி நாதபுரத்தில் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் அப்துல் காதர் பணி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது, நான்கு வழிச்சாலையில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் அப்துல் காதர் தலையில் பலத்த காயமுற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தால் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் பழனியில் மற்றொரு பகுதியான திண்டுக்கல் பழனி தேசிய நெடுஞ்சாலையில் சப்பல நாயக்கன்பட்டியில் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்ததில் செண்டி மீடியேட்டர் மீது மோதி காரில் பயணம் செய்த நான்கு பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் திண்டுக்கல் ns நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த இரண்டு பேர் பலத்த காயங்கள் உடன் பழனி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு வழி சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்கிறது . மாவட்டத்தில் தனியார், அரசு பேருந்துகள், தனியார் வாகனங்களின் போக்குவரத்திற்கு நான்கு வழிச்சாலை , புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தனியார் வாகனங்களான கார், கனரக வாகனங்களின் வேகம் அதிகரித்து வருகிறது. தனியார் வாகனங்களில் அதிக வேகத்தில் பயணிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புகள் , முன்னால் செல்லும் வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
விபத்தில் சிக்கும் பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் சீட் பெல்ட் போன்றவை அணியாமல் அதிக காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தலைக்காயம் ஏற்படும் போது உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்து விடுகிறது. விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில நாட்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. அது போல் விபத்து இடத்திலே உயிர் இழப்பதும் அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் பல்வேறு இடங்களில் விபத்தில் ஐந்து பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
நான்கு வழிச்சாலையில் விபத்து அடிக்கடி நடக்கும் இடங்களில் வேகத்தின் அளவை குறைக்க வேண்டும். விபத்து தடை கோடுகளை அமைக்க வேண்டும். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு வலது புறம் வழிவிட்டு செல்ல அறிவுறுத்தல்களை வழங்குவதோடு உள்ளூர் நபர்கள் நான்கு வழி சாலையில் டூவீலர்களில் எதிரே வருவதையும் தவிர்க்க வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்க நெடுஞ்சாலை துறையினர் முன்வர வேண்டும்.அறிவுறுத்தலாமே நான்கு வழிச்சாலையில் தற்போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
விபத்து ஏற்படும் இடங்களில் 80 கிலோமீட்டர் ஆக குறைக்க வேண்டும். முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலையில் மேடு இருக்கும் பட்சத்தில் அங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். விபத்து ஏற்பட்ட பின் தவறு யாருடையது என்பதை பார்ப்பதை விட விபத்து ஏற்படுவதற்கு முன்பு அனைத்தையும் சரி செய்ய போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.





















