விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் - ரவி பச்சமுத்துவின் பரபரப்பு பேட்டி
தமிழ்நாடு மக்கள் யார் வந்தாலும் வரவேற்கும் எண்ணம் கொண்டவர்கள். தமிழ் மக்கள் இடம் துன்புறுத்தல் என்பது இருக்காது. - IJK தலைவர் ரவி பச்சமுத்து பேட்டி
தமிழ்நாடு எப்போதும் இதுபோன்ற விஷயங்களை கையில் எடுக்காது. தமிழ்நாடு மக்கள் யார் வந்தாலும் வரவேற்கும் எண்ணம் கொண்டவர்கள். தமிழ்மக்கள் இடம் துன்புறுத்தல் என்பது இருக்காது என்று ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டார். கலந்தாய்வு கூட்டத்திற்கு முன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் 8 வருடங்களாக முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் மரியாதை செலுத்தி வருகிறோம். தற்போது மாவட்ட அளவில் ஆய்வு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுவதாக மோடி கூறியது குறித்த கேள்விக்கு, தமிழ்நாடு எப்போதும் இதுபோன்ற விஷயங்களை கையில் எடுக்காது.
தமிழ்நாடு மக்கள் யார் வந்தாலும் வரவேற்கும் எண்ணம் கொண்டவர்கள். தமிழ்மக்களிடம் துன்புறுத்தல் என்பது இருக்காது. ஐ.ஜே.கே கூட்டணி நிலைபாடு குறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்து பெரிய கட்சிகளை இன்னும் முடிவு எடுக்காத நிலையில், எம் பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். அது தொடர்ந்து வருகிறது. அவர்களுடன் தொடர்வது குறித்து (இன்னும் Yes or No) முடிவு செய்யப்படவில்லை. காலங்கள் தான் பதில் சொல்லும், இதுகுறித்து பாரிவேந்தர் பொதுக்குழு கூட்டி முடிவு செய்வார். தமிழக அரசியலில் புதுவரவாக விஜய் வந்து பல்வேறு இன்னல்களை சந்திப்பது குறித்த கேள்விக்கு, அரசியலில் வெளியில் இருந்து பார்ப்பது வேறு. அதில் பாதிக்காதது யாரும் கிடையாது.
இதில் நாங்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளோம். அரசியலில் 15 ஆண்டுகளில் பல்வேறு இன்னல்களுக்கு பின்பு தற்போது தான் நிலைத்தன்மைக்கு வந்துள்ளோம். இது பலருக்கு தெரியாது. இதனைத் தாண்டி விஜய் வரவேண்டும். டெல்டா மாவட்டத்தில் பயிர் சேதம் மற்றும் நெல் கொள்முதல் குறித்த கேள்விக்கு, டெல்டா மாவட்டங்களில் நெல் முளைக்க தொடங்கியுள்ளது. தானியத்தை சேமிக்க வேண்டியது அரசின் கடமை. அதனை வேகமாக செய்திருக்க வேண்டும். மழை வருவதை முன்கூட்டியே கணிக்கக்கூடிய பல்வேறு விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை காலதாமதம் ஆக்காமல் விரைந்து செய்திருக்க வேண்டும். விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்க வேண்டும் அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்தால் அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என நினைக்கலாம்.
இந்திய ஜனநாயக கட்சி இலவசம் தவிர்ப்போம் என கூறினோம். மேலே இருந்து கொண்டு கூறுகிறார்கள் என பலர் சொல்கின்றனர். இலவசம் தேவைப்படாத சூழ்நிலையை உருவாக்குவோம் என்பதே பொருள் மற்றும் ஆழமான கருத்து. பெரம்பலூரில் பாரிவேந்தர் வெற்றி பெற்ற அரசு பணத்தில் என்ன நலத்திட்டங்கள் செய்தோம் என்பதை மக்களுக்கு வழங்கியுள்ளோம். அரசியலில் பலர் சம்பாதிக்கும் நோக்குடன் வருகின்றனர். எங்கள் கட்சியை சேர்ந்த நபர்களை மக்கள் பணி மேற்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்திய ஜனநாயக கட்சி கன்னியாகுமரி முதல் சென்னை வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.
யாரையும் தூண்டி விடுவது மற்றும் சாதி அரசியல் நாங்கள் செய்வது இல்லை. பெரம்பலூரில் பாரிவேந்தர் இருந்தபோது எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும். நாங்கள் காசு கொடுத்து வந்தால், சாலை வசதி குடிதண்ணீர் வசதி குறித்து கேட்க முடியுமா? எஸ் ஐ ஆர் - யை திமுக கூட்டணி எதிர்த்து வருவது குறித்த கேள்விக்கு, திமுக கட்சி மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் எதிர்ப்பார்கள். எஸ் ஐ ஆர் - ஆல் எந்தப் பிரச்சனையும் இல்லை என நினைக்கிறோம். பெரம்பலூர் அரியலூர் ரயில் பாதை திட்டம் செயல்படுத்தாததற்கு போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.






















