கிராமபுற பகுதிகளில் வீட்டு கட்டிட அனுமதி பெறுவது எப்படி..? - மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பு
கிராம ஊராட்சிகளில் ஒற்றைச் சாளர முறையில் சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டிட வரைபட அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்.
கிராம ஊராட்சிகளில் ஒற்றைச் சாளர முறையில் சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டிட வரைபட அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார். சுய சான்று மூலம் கட்டிட அனுமதி பெற கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ள தேனி மாவட்ட ஆட்சியர், அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
தமிழகத்தில், 10,000 சதுரடி வரையிலான குடியிருப்புகளுக்கு, கட்டட அனுமதி அளிக்கும் அதிகாரம், உள்ளாட்சிகளுக்கு இருக்கிறது. இதை பயன்படுத்துவதில், பல்வேறு நிலைகளில், உள்ளாட்சி அமைப்புகள் தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்தது. குறிப்பாக அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் தலையீடு அதிகம் இருப்பதால் இந்த விவாகரத்தில் கையூட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில், அனைத்து வகையான கட்டட அனுமதி பணிகளும், ஒற்றை சாளர முறைக்கு மாற்றிது. இதில், குறைந்த பரப்பளவில் வீடு கட்டுவோர், விரைவாக அனுமதி பெற புதிய திட்டம் உருவாக்கியது.
இதன்படி, 2,500 சதுரடி மனையில், 3,500 சதுரடி வரை வீடு கட்டுவோர், குறிப்பிட்ட சில ஆவணங்களை, ஆன்லைன் முறையில் சமர்ப்பித்தால் போதும். அடுத்த சில நிமிடங்களில், அவர் செலுத்த வேண்டிய கட்டண விபரம் தெரிவிக்கப்படும். அந்த கட்டணங்களை, ஆன்லைன் முறையில் செலுத்திய, சில மணி நேரங்களில் கட்டட அனுமதிக்கான ஒப்புகை சான்று, விண்ணப்பதாரருக்கு அளிக்கப்படுகிறது. இந்த முறை காரணமாக வீடு கட்டுவதற்காக யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பல ஆயிரம் பேர் இந்த திட்டத்தால் பயன்பெறுள்ளார்கள்.
இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், 2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில், 3500 சதுர அடி வரையிலான கட்டிடங்களாக, தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்புக்கு ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழை அடிப்படையாகக் கொண்டு கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் குடியிருப்பு கட்டிட அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் நடைமுறையை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கட்டிட அனுமதியைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல், கட்டிட அனுமதிக்கான கட்டணம் செலுத்துவதை எளிதாக்குதல், ஒப்புதலுக்குப் பிந்தைய ஆய்வுகள் மேற்கொள்ளுதல் மற்றும் கட்டிட அனுமதியைப் பெறுவதில் இடைத்தரகர்களைத் தவிர்க்கலாம். சுய சான்று மூலம் கட்டிட அனுமதி பெற கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநரால் கையொப்பமிடப்பட்ட திட்ட வரைபடம், விண்ணப்பதாரர் பெயரில் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம், விண்ணப்பதாரரின் பெயரில் பட்டா, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு ஆவணம், தள புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவித்துள்ளார்.