”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த கட்சிகளின் கடுமையான ஏதிர்ப்பை அடுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை அன்று அரசு விடுமுறை தினம் இருக்கும் நிலையில், திட்டமிட்டு பொங்கல் பண்டிகை அன்று சி.ஏ. தேர்வுகளை மத்திய அரசு அறிவித்திருப்பதாக மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதிலும் மொழி பிரச்னையை எதிர்க்கட்சிகள் பிரச்சாரமாக கொண்டு வருகின்றனர் என்றும் தேர்வு ஆணையத்தின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வை 16ஆம் தேதி அன்று நடைபெறும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது