Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Mahindra XUV 7XO: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ராவின் XUV 7XO பல அட்டகாசமான தொழில்நுட்ப அம்சங்களுடன் 2026ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Mahindra XUV 7XO 2026: மஹிந்த்ராவின் XUV 7XO காரில் இடம்பெற உள்ள, தொழில்நுட்ப அம்சங்கள் என்ன என்பது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
மஹிந்த்ராவின் XUV 7XO
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் உள்நாட்டு நிறுவனமான மஹிந்த்ராவின் XUV 7XO கார் மாடல், வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மற்றொரு டீசரும் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவானது புதிய எஸ்யுவி காரில் இடம்பெற உள்ள பல முக்கியமான அம்சங்களை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அதில் 540 டிகிரி கேமரா, முன்புற பயணிகளுக்கான BYOD (Bring Your Own Device) தொழில்நுட்பத்துடன் கூடிய காருக்குள்ளேயே தியேட்டர் மோட் போன்ற அம்சங்களும் அடங்கும்.
XUV 7XO-ல் கவனத்தை ஈர்க்கும் அம்சங்கள்:
540 டிகிரி கேமரா வசதியானது சுற்றுப்புறத்தை காண வழிவகுக்கும் மேம்படுத்தப்பட்ட அணுகலாகும். இதன் மூலம் வாகனத்தை சுற்றி இருக்கும் பகுதிகளை மட்டுமின்றி, அடிப்பகுதியில் இருப்பதையும் துல்லியமாக காண முடியும். இந்த அமைப்பானது முன், பின் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள், என பல இடங்களில் பொருத்தப்பட்ட பல கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ஒருங்கிணைத்து ஒரே திரையின் வழியே காட்டுகிறது. இந்த காரானது புதிய ADAS விசுவலைசேஷன் ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. இது செயல்பாட்டில் உள்ள ட்ரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்களை நிகழ்-நேர கிராபிகல் மூலம் அடையாளப்படுத்துகிறது.
புதிய டீசர் வாயிலாக இன் - கார் தியேட்டர் மோட் எனும் புதிய வசதியும் இந்த காரில் இடம்பெற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது BYOD செயல்பாட்டை ஆதரிக்கிறது. இதன் மூலம் பயனிகள் செல்போன் உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் இணைத்து பயன்படுத்த வழிவகுக்கிறது. இது மஹிந்த்ராவின் Adrenox+ சாஃப்ட்வேர் மூலம் இயங்குகிறது.
கூடுதலாக மஹிந்த்ராவின் XUV 7XO காரில் ட்ரிபிள் ஸ்க்ரீன் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. ப்ளாக் மற்றும் டேன் ஃபினிஷிங்குடன் கூடிய, புதிய டூ ஸ்போக் ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் போன் சார்ஜர்ஸ், 16 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம், ஒன்றுக்கும் அதிகமான ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
XUV 7XO-ல் மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங்
ஏற்கனவே வெளியான டீசர்களானது EV 9S கார் மாடலின் டிசைனிலிருந்து XUV 7XO பல தாக்கங்கள் பெற்று இருப்பதை உணர்த்தியுள்ளன. அதாவது டூயல் - பாட் எல்இடி ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பிக்சல் ஸ்டைல் எலிமெண்ட்களுடன் கூடிய எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை EV 9S மாடலில் இருப்பதை போன்றே XUV 7XO எஸ்யுவியில் உள்ளது.
XUV 7XO-ல் இன்ஜின் ஆப்ஷன்கள்
மேம்படுத்தப்பட்ட XUV 7XO-ல் இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி, பழைய XUV700 ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் இருந்த ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கிறது. அதன்படி இந்த எஸ்யுவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை முறையே 200PS & 380Nm மற்றும் 185PS & 450Nm ஆற்றலை உற்பத்தி செய்யும்.
XUV 7XO - முன்பதிவு, வெளியீடு
மேம்படுத்தப்பட்ட XUV 7XO அல்லது XUV700 காரானது, வரும் ஜனவரி 5ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு, விரைவில் விற்பனைக்கும் கொண்டுவரப்பட உள்ளது. தொடக்க நிலை வேரியண்ட்களுக்கான விலையானது தற்போதைய எடிஷனுக்கான விலையில் இருந்து பெரிய மாற்றம் காணாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், டாப் எண்ட் வேரியண்ட்களுக்கான விலையில் சற்றே அதிகரிப்பு வரக்கூடும். உள்நாட்டு சந்தையில் XUV 7XO காரானது டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஹுண்டாய் அல்கசார் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளது.





















