"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மஹாயுதி கூட்டணி அங்கு அபார வெற்றி பெற்ற நிலையில், அந்த கூட்டணியின் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. பாஜக அதிக தொகுதிகளை வென்றுள்ளதால் தேவேந்திரபட்னாவிஸ் தான் முதல்வராக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்பட்டது அதனால் அவர் தான் மீண்டும் முதல்வர் என்று சிவசேனா தரப்பும் கூறி வந்தன.
இந்நிலையில், கூட்டணி கட்சியினருடன் ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்த ஏக்நாத் ஷிண்டேவை, அடுத்த முதல்வரை கூட்டணி கட்சியினர் தேர்வு செய்து அறிவிக்கும் வரை காபந்து முதல்வராக அறிவித்துள்ளார். தற்போது ஏக்நாத் ஷிண்டேவே மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முதல்வராக, தற்காலிக (காபந்து முதல்வராக தொடரவுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

