மேலும் அறிய

Theni | தேனியின் வரலாறை தெரிஞ்சுக்கணுமா..? ஒருநாள் இந்த மியூசியம் போனாலே போதும்!

தேனி மாவட்டத்தின்வரலாற்றை பதிவு செய்யும் அரசு அருங்காட்சியகம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ளது. பழங்கால கல்வெட்டுகள், சிலைகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்யும் அரசு அருங்காட்சியகம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ளது. பழங்கால கல்வெட்டுகள், சிலைகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் பொதுமக்களின்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Theni | தேனியின் வரலாறை தெரிஞ்சுக்கணுமா..? ஒருநாள் இந்த மியூசியம் போனாலே போதும்!

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அரவணைப்பில் இயற்கை எழில் கொஞ்சும் விதமாக அமைந்துள்ளது தேனி மாவட்டம். இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தின் வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக தமிழக அரசு, தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்த அருங்காட்சியகம் அமைத்துள்ளது. தேனி மாவட்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இயற்கை, அரசியல், சமூகம் ,கலை இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம் இவற்றை விளக்கும் விதமாக இரண்டு மாடிகளைக் கொண்ட கண்காட்சியகம் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு நட்சத்திர ஹோட்டல் போல பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த அருங்காட்சியகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றாக உள்ள கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கை ,வீரம் போன்றவற்றை  விளக்கும் விதமாக உள்ள நடுகல்லும், தஞ்சை மன்னர்கள், மருது சகோதரர்கள் பயன்படுத்திய போர் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல கோடி ஆண்டுகளாக வாழ்ந்த உயிரினங்கள், செடி, கொடி ,விலங்குகள் ஆகியவற்றின் பாசில் ,படிமங்கள் ஆகியவற்றை தேனி மாவட்ட கனிமவள துறையின் மூலம் பெறப்பட்ட காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது,

Theni | தேனியின் வரலாறை தெரிஞ்சுக்கணுமா..? ஒருநாள் இந்த மியூசியம் போனாலே போதும்!

தேனி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் ஏலம் , காபி தேயிலை உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் குறித்த விவரங்களும், மேகமலை வனச்சரகத்தில் உள்ள உயிரினங்களின் பதம் செய்யப்பட்ட எலும்புகள், முதுமக்கள் தாழி, அக்கால, இக்கால இசைக்கருவிகள் தேசிய அளவில் நம் மாவட்டத்தை பறைசாற்றும் விதமாக பல அற்புத படைப்புகள் இங்கே இடம் பெற்றிருக்கிறது. இந்த அருங்காட்சியகம் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ,மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து நாட்களும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ஐந்து ரூபாயும், சிறியவர்களுக்கு மூன்று ரூபாயும் ,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாகவும், அனுமதி வழங்கப்படுகிறது, வெளிநாட்டவர்,

Theni | தேனியின் வரலாறை தெரிஞ்சுக்கணுமா..? ஒருநாள் இந்த மியூசியம் போனாலே போதும்!

வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு  நூறு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது .தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் இந்த அருங்காட்சியகம்  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும், கொரோனா காலத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த அருங்காட்சியகம் மிகவும் பயனனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தின் பழங்கால வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பும் மக்கள் ஒருமுறை இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தால் போதும் என்ற அளவில் இது அமைந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget