மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
தமிழ்நாட்டில் போதைப் பொருள் சர்வசாதாரணமாக கிடைக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவர்கள் இளைஞர்களை ஒட்டுமொத்தமாக சீரழித்து வரும் போதை பொருள் நாசகார சக்திகளை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
போதைப் பொருள் புழக்கம்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில்,” இன்றைக்கு போதை பொருள் கடத்தல் மன்னன் அடிப்படையிலே திமுக கட்சியை சேர்ந்தவரே 20,000 கோடி அளவில் கடத்தியுள்ளார். அது விசாரணையில் இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு கூட 150 கோடி அளவில் போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றபோது அது பறிமுதல் செய்து இருக்கிறது. இந்த கவலை அளிக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்க்கிறோம். போதைப்பொருள் பயன்பாடு மனதையும், உடலையும் மாற்றி அவர்கள் எதிர்காலத்தை சீரழித்து வருகிறது. கஞ்சா, அபின் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் பலரகம் இருந்தாலும், மாத்திரை வடிவிலும் இன்றைக்கு போதை பொருள் சர்வ சாதாரணமாக விற்கக்கூடிய சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.
சீரழிந்த தமிழகம்:
ஆகவே இளைஞர்களை பேரழிவுக்கு இழுத்துச் செல்லும் போதை பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும், அதுகுறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் கூட, முதலமைச்சர் இதுகுறித்து ”போதைப்பொருள் நடமாட்டம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சொல்கிற நிலையை நாம் பார்க்கிறோம்.
இது ஒரு புறத்தில் நம்பிக்கை ஏற்படுத்துகின்ற விதமாக தெரிந்தாலும், உண்மையில் தமிழகம் எப்படி சீரழிந்து இருக்கிறது என்பது எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. மாவட்ட கலெக்டர் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேசும்பொழுது போதைப் பொருள் நடமாட்டம் அறவே இல்லை முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று பேசியது அவர் வைத்திருக்கிற கோரிக்கையா? கட்டளையா, உத்தரவா? அறிவுரையா? என்ற விவாதம் நடந்து கொண்டு வருகிறது.
போதைப் பொருள் தொடர்பாக கைது
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போதை பொருள் நடத்தியதாக 2,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7,000 மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவித்தாலும் ,இதில் 4,000 மேற்பட்டவர்கள் அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா என வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் சமீப காலமாக போதை பொருள் தொடர்பான பல குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து நடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள் பிடிபட்டன செய்திகள் வெளியாகிவருகின்றன.
இதுவரை தமிழக அரசியலில் வரலாறு காணாத வகையில் போதைப்பொருள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக தங்கு தடையின்றி கிடைத்து மாணவர்கள் செல்வங்களை, இளைஞர்களை ஒட்டுமொத்தமாக சமுதாயத்தை சீரழிக்கிற இந்த போதை பொருள் நாசகார சக்தியை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா” என கேள்வி எழப்பியுள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Bakrid Goat Sale: பக்ரீத் பண்டிகை... களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை - ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion