மேலும் அறிய

AI in IIT Madras: ஐஐடி சென்னையில் AI படிக்க ஆசையா? இந்த ஆண்டிலேயே சேரலாம்: எப்படி?- முழு விவரம்

ஐஐடி சென்னை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐஐடி சென்னை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றின் நிபுணத்துவத்தை பல்வேறு அம்சங்களில் வளர்க்கச் செய்து தொழில்துறையில் பரந்த அளவில் பயன்பாடுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

ஐஐடி சென்னை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024- 25ம் கல்வியாண்டில் இருந்து இதற்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.

என்ஐஆர்எஃப் தரவரிசையில் நாட்டிலேயே நம்பர் ஒன் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் இளங்கலைப் பட்டம், மாணவர்களின் முக்கிய திறன்கள் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை எப்படி?

ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வு மூலம் இப்பாடத்திட்டத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது. ஜேஇஇ மூலம் இதில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். பல்துறை அம்சங்களுடன் கணித அடிப்படைகள், தரவு அறிவியல்/ ஏஐ/எம்எல் அடித்தளங்கள், பயன்பாட்டு மேம்பாடு, பொறுப்பான வடிவமைப்புகளும் இப்பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

ஐஐடி மெட்ராஸ்-ன் மதிப்புமிக்க முன்னாள் மாணவரும், ஐகேட் மற்றும் மாஸ்டெக் டிஜிட்டல் ஆகியவற்றின் இணை நிறுவனருமான திரு சுனில் வாத்வானியின் ரூ.110 கோடி நன்கொடையில் நிறுவப்பட்டுள்ள வாத்வானி  தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி மூலம் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.  உலகெங்கிலும் உள்ள சிறந்த ஏஐ-யை மையமாகக் கொண்ட பள்ளிகளில் ஒன்றாக விளங்கச் செய்து, தரவு அறிவியல் மற்றும் ஏஐ தொடர்பான கொள்கைகளை அரசுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது இதன் இலக்காகும்.

பிடெக்கின் இப்பாடத்திட்டம் பல்வேறு கல்வி நெகிழ்வுத்தன்மையை வழங்கும். மாணவர்கள் தங்கள் கற்றல் பயணத்தை இதே துறையிலும் பிற துறைகளில் இருந்தும் விருப்பத் தேர்வுகள் மூலம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஸ்பீச் அண்ட் லாங்வேஜ் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் விஷன் ஆகியவற்றில் தொடங்கி அப்ளிகேஷன்ஸ் இன் கண்ட்ரோல் அண்ட் டிடெக்சன், டைம் சீரிஸ் அனாலிசிஸ் வரை பல்வேற அம்சங்கள் குறித்து மாணவர்கள் ஆழமாக ஆராய முடியும்.

பாடத்திட்டம் என்ன?

ஏஐ மற்றும் தரவுப் பகுப்பாய்வில் விரிவான அடித்தளத்துடன் இத்துறையில் வெற்றிபெறுவதற்குத் தேவையான பல்வேறு பாடங்களைக் கொண்டு முக்கிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  நேரியல் இயற்கணிதம் (Linear Algebra), நுண்கணிதம் (calculus) போன்ற அடிப்படை படிப்புகளில் தொடங்கி, இயந்திரக் கற்றல் (machine learning), ஆழமான கற்றல் (deep learning), reinforcement learning (வலுவூட்டல் கற்றல்) ஆகியவற்றில் சிறப்புத் தொகுதிகள் இடம்பெறும். இத்துறையின் வலுவான கல்வித்தொகுப்பைக் கொண்டு இத்துறையில் உள்ள பல்வேறு சவால்களை சமாளிக்க முடியும்.

உலகிலேயே முதன்முறை

இந்த பிடெக் பாடத்திட்டம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநரும், கணினி அறிவியல் ஆசிரியருமான பேராசிரியர்  வி.காமகோடி கூறுகையில், “ஏஐ என்பது பொறியியல், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகளை உள்ளடக்கியதாகும்.  இத்துறையில் வெற்றிகரமாகத் திகழ பல்துறைத் தொடர்புகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதற்காகவே செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வில் பிடெக் படிப்பு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படிப்பு உலகிலேயே முதன்முறையாகும்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களது ஆசிரியர்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வழங்குவதன் மூலம்  வளர்ந்துவரும் சந்தையில் பெரும் ஏஐ சவால்களை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், உயர்மட்ட ஏஐ வல்லுநர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை உருவாக்கவும் ஐஐடிஎம் விரும்புகிறது” எனக் குறிப்பிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget