மேலும் அறிய
railway: ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு !
இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பெண்ணூர், ஹரிஹர், தேவாங்கீர், சிக்ஜாஜுர், பிரூர், அரிசிகரே, தும்கூர், யெஸ்வந்த்பூர், பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, இராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்-ஹுப்ளி வாரந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச் 26 ஆம் தேதி வரை நீட்டிப்பு https://t.co/wupaoCQKa2 | #Rameswaram #Hubballi #Train pic.twitter.com/h4MJLeANMD
— ABP Nadu (@abpnadu) December 16, 2022
அதன்படி ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஜனவரி 7 முதல் மார்ச் 25 வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு இராமேஸ்வரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஜனவரி 8 முதல் மார்ச் 26 வரை ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பெண்ணூர், ஹரிஹர், தேவாங்கீர், சிக்ஜாஜுர், பிரூர், அரிசிகரே, தும்கூர், யெஸ்வந்த்பூர், பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, இராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மீனாட்சியம்மன் எழுந்தருளிய தேரினை பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement





















