Pongal 2022 : பொங்கல் கரும்பு.. அர்த்தமும், முக்கியத்துவமும்..
தமிழர்களின் திருவிழா பொங்கல் பண்டிகையில் பயன்படும் கரும்பின் பயன்பாடும் , அதன் சிறப்புகளும்.
தமிழர்கள் பாரம்பரியமாக திருவிழாவாக கொண்டாடப்படும் தை முதல் நாள் பொங்கல் விழாவானது தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழா என்று கூறியவுடன் முதலில் நமக்கு நினைவு வருவது இனிக்கும் பொங்கல், அதுபோக இனிக்கும் கரும்பு. இந்த கரும்பு என்பது பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. பொங்கல் திருவிழாவை பொருத்தவரை விவசாயத்தை ஒப்பிட்டு இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் ஒப்பிடுகின்றனர் தமிழர்கள்.
பொங்கலுக்கு மிகவும் முக்கியமானதாகவும் சட்டென நினைவுக்கு வருவததான் இந்த கரும்பு. பொங்கல் பண்டிகை கரும்பு இல்லாமல் நடக்குமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. பொங்கலுக்கு கரும்பு முக்கியமானது. கரும்பு கடிக்காமல் பொங்கல் உண்டா? அந்த கரும்பு சுவைப்பதில் தனித்துவம் என்ன தெரியுமா? என்ற கேள்விக்கு கரும்பின் எல்லா பகுதியும் இனிப்பைத் தருவதில்லை நுனிக் கரும்பு லேசான இனிப்புடன் அதிக அளவில் உப்பு கரிப்பதுபோல இருக்கும்.
ஆனால் அடிக் கரும்பு மிகவும் இனிப்பாக இருக்கும் அதைத்தான் வாழ்க்கையில் மனிதர்கள் முன்னேற கடின உழைப்பு அவசியம் என இந்த கரும்பின் சுவை இருக்கும் இடத்தைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடின உழைப்பு ஆரம்பத்தில் இனிமை தராது கஷ்டங்களைக் கொடுக்கும் ஆனால் போகப்போக அடிக் கரும்பின் இனிப்பு போல அது வெற்றியை தரும் எனவும் கூறுகின்றனர் அறிந்தவர்கள். மேலும் கரும்பின் வெளிப்புறம் கரடுமுரடாக வளைவுகளும், முடிச்சுகளும் நிறைந்து இருக்கும், வெளிப்புறம் ஒரு கடினமான தோற்றத்தையே வெளிப்படுத்தும் அதனை உரிப்பதற்கு சிரமமும் உண்டு, உறித்தால்தான் உட்புறத்தில் இருக்கும் இனிமையான சாறு கிடைக்கும் .
அது போல வாழ்க்கையில் எத்தனை கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் முயற்சியோடு அந்தக் கரடுமுரடான பாதையை சலிப்பின்றி கடந்து சென்றால் இனிமையான வாழ்க்கையும் சுவைக்க முடியும் என்பதுதான் இந்த கரும்பு உணர்த்துகிறது. பெரும்பாலும் பொங்கல் பண்டிகையில் தனித்துவமாக இருக்கும் இந்த கரும்பு பொங்கல் விழாவில் மட்டுமல்ல, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான ஒரு உணவுப் பொருளாகவும் இருந்து வருகிறது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த கரும்பின் பயன்பாடு இருப்பதில்லை. ஆனால் அதிகமான கரும்பின் பயன்பாடு இருக்கும் ஒரே விழா பொங்கல் விழாவில் இந்த கரும்பின் பயன்பாடு இருக்கப்படுகிறதை பார்க்கமுடியும். பொதுவாக கரும்பில் பல வகைகள் இருந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு என பயிரிடப்படும் இந்த பொங்கல் கரும்பு 9 மாத பயிராகவும் அதாவது ஒரு பெண் குழந்தை பெற்றெடுக்கும் மாத காலங்களாக பார்க்கிறார்கள் கரும்பு விவசாயிகள்.
இந்த தென் மாவட்டங்களான தேனி , திண்டுக்கல் பகுதிகளில் இந்த கரும்பு விவசாயமானது, அதிகளவில் பயிரிடப்பட்டு இந்த வருடம் விற்பனைக்காக அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.