செங்கலை காட்டி வாக்கு சேகரித்த திமுக தற்போது எய்ம்ஸ்க்கு ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை - ஆர்.பி.உதயகுமார்
முதல்வர் மதுரை மக்களை உண்மையாக நேசிப்பவராக இருந்தால் வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் மதுரைக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி மதுரை திருமங்கலம் தொகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அணை கட்ட வேண்டும். திருமங்கலம் நகர்ப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் திருமங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
முதல்வர் ஏளனம் செய்வது எடப்பாடி பழனிச்சாமியை அல்ல, அதிமுகவிற்கு வாக்களித்த மக்களை ஏளனம் செய்வது போல் உள்ளது. முதல்வர் எதிர்கட்சியையும் எதிர் கட்சி தலைவரையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும், எதிர்கட்சியை மதிக்காதவர் எப்படி மக்களை மதிப்பார்"
— arunchinna (@arunreporter92) September 10, 2022
- ஆர்.பி.உதயகுமார்@SRajaJourno
| pic.twitter.com/yCX7ozHKC7
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்