மேலும் அறிய

திண்டுக்கல்: 331 சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி வருகை..

331 சர்க்கரை காவடியுடன் 76 ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் ஒன்றிணைந்து 21 நாட்கள் பயணமாக  புறப்பட்டு இன்று காலை நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு வந்தடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு இன்று காலை 400 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வந்து சேர்ந்தனர்.  331 சர்க்கரை காவடியுடன் 76 ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் காவடிகள் 16-1-2024 அன்று தேவகோட்டை நகரப் பள்ளிக்கூடத்தில் காவடி கட்டி வைத்து பூஜை செய்த பின் அங்கிருந்து கிளம்பி 19-1-2024 அன்று குன்றக்குடியில் ஒன்றிணைந்து 21 நாட்கள் பயணமாக  புறப்பட்டு இன்று காலை நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு வந்தடைந்தனர்.

திண்டுக்கல்: 331 சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி வருகை..

பின்னர் பானகபூஜை நடைபெற்றது.  பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் நத்தம் மாரியம்மன் கோவில்தெரு , பெரியகடை வீதி, பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பாதைகளின் வழியாக பழனி நோக்கி தங்களது யாத்திரையை தொடங்கினர். அப்பொழுது வழி நெடுகிலும் பக்தர்கள், பொதுமக்கள் காவடியை வரவேற்று ஆசி பெற்றனர்.

Ayodhya Ram temple: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?

தொடர்ந்து காவடி பழனியை நோக்கி புறப்பட்டன. காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் பழனியை நோக்கி புறப்பட்டார்கள்.சர்க்கரை காவடியுடன் புறப்பட்ட இந்த மக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நத்தம் வழியாக பழனியை நோக்கி தங்களது பாதயாத்திரை பயணத்தை தொடர்கின்றனர். ஜனவரி 25  தை பூசத்தினத்தன்று பழனி சென்றடைந்து அதன் பின் ஜனவரி 28 மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்தி வழிபாடுகளை நிறைவு செய்கிறார்கள்.

திண்டுக்கல்: 331 சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி வருகை..

நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல், உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 400 ஆண்டுகளாக இந்த சர்க்கரை காவடிகளை  21 நாட்கள் பாதயாத்திரையாக சென்று பழனி முருகனை தரிசித்து காவடி செலுத்தி தங்கள் நேர்த்திகடனை செலுத்துவது வழக்கம். அதன்பின் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்புதங்களது முன்னோர்கள் சென்று வந்த பாதையிலேயே இவர்கள் இன்றளவும் சென்று வருவது மாற்றமுடியாத வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள்.

Sania Mirza khula: “குலா” என்றால் என்ன? சோயப் மாலிக்கிடம் இருந்து சானியா மிர்சா விவாகரத்து பெற்றது எப்படி?
திண்டுக்கல்: 331 சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி வருகை..

Shakeela: நடிகை ஷகீலா மீது கொடூர தாக்குதல்.. சமாதானம் பேசிய வழக்கறிஞரையும் அடித்த வளர்ப்பு மகள் ஷீத்தல்!

செல்லும் இடமெல்லாம் அன்னதானத்துடன் பக்தியை வளர்ப்பது நகரத்தார்களின் சிறப்பம்சமாகும். மாறி வரும் கால சூழ்நிலையில் கூட தங்களது பழக்கங்களை மாற்றாது தங்களது முன்னோர்கள் காட்டிய பாதையில் இன்றும் மாறாது தங்களது பயணங்களை வைத்திருப்பது இவர்களின் தனிச்சிறப்பு. இருந்தும் இல்லாததை போல் மேல் சட்டை அணியாமல் ஆண்டியாக கிடைத்த இடத்தில் சாப்பிட்டு ரோடு ஓரங்களில் படுத்து தங்கள் பாரம்பரியத்தை சிறப்பை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பித்தக்கது

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget