மேலும் அறிய

பழனி கிரிவல பாதையில் வசித்து வந்த மக்கள் சாலை மறியல் - அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக புகார்

பழனி அடிவாரம் கிரிவலம் பாதையில் உள்ள அண்ணா செட்டி மடம் பகுதியில் ஐந்து தலைமுறைகளாக வசித்து வந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை காலி செய்து மாற்று இடம் வழங்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பழனியில் கிரிவல பாதையில் வசித்து வந்த பொதுமக்களுக்கு இரண்டு சென்டு இடம் வழங்குவதாக கூறி , ஒரு சென்டுக்கும் குறைவாக காலி வீட்டுமனை பட்டா அதிகாரிகள் வழங்கியதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி கிரிவல பாதையில் வசித்து வந்த மக்கள் சாலை மறியல் - அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக புகார்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவலம் பாதையில் உள்ள அண்ணா செட்டி மடம் பகுதியில் ஐந்து தலைமுறைகளாக வசித்து வந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை காலி செய்து மாற்று இடம் வழங்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் அடிவாரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பழனி கிரிவல பாதையில் வசித்து வந்த மக்கள் சாலை மறியல் - அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக புகார்

அந்த வழக்கின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து குடியிருப்புகளாக வசித்து வருவதற்கு மாற்று இடம் வழங்குவதற்கு நீதிமன்றத்தில் பரிந்துரை செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதற்கான  அடிப்படையில் நீதிமன்றம் குடியிருப்பு வாசிகளுக்கு மாற்றிடம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் 150-க்கும் பொதுமக்களை இன்று வட்டாட்சியர் சக்திவேலன் ஏற்பாட்டில் இரண்டு சென்ட் அளவிலான காலி வீட்டுமனை பட்டா வழங்குவதாக கூறி பொதுமக்களை அழைத்து வந்துள்ளனர் .

பழனி கிரிவல பாதையில் வசித்து வந்த மக்கள் சாலை மறியல் - அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக புகார்

தனியார் மண்டபத்தில் வைத்து வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அப்போது அந்த வீட்டுமனை பட்டாவில் ஒரு சென்டிற்கும் குறைவாக இடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் வீடு கட்டுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை அந்த பட்டாவில் குறிப்பிட்டிருந்தது. அதில் வீடு கட்டுவதற்கு மூன்று அடி பின்புறமும், 3 அடி வீட்டின் முன்புறமும் காலியாக வைத்திருக்க வேண்டும், மாடி வீடு கட்டக்கூடாது என்ற நிபந்தனைகள் எல்லாம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த பொதுமக்கள், அதிகாரியிடம் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமியிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து அதிகாரிகளும்,

பழனி கிரிவல பாதையில் வசித்து வந்த மக்கள் சாலை மறியல் - அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக புகார்

நகர மன்ற தலைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இதனை கண்டித்து  இரண்டு சென்டு நிலம் வழங்கப்படும் என அழைத்து வந்து தங்களை அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக என கூறி பொதுமக்கள் பழனி தாராபுரம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களை வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்று தீர்வு காணப்படும் என கூறி அழைத்துச் சென்றனர். பழனியில் ஆக்கிரமிப்பு செய்த குடியிருப்பாளர்களுக்கு மாற்று இடம் தருவதாக கூறி அதிகாரிகள் ஏமாற்றியதாக பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Embed widget