மேலும் அறிய

Southern Railway: கிறிஸ்துமஸ் பண்டிகை; மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் சிறப்பு ரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க டிசம்பர் 25 அன்று மதுரை வழியாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாகர்கோவில் - டாக்டர் எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் ஒரு வழி சிறப்பு ரயில் (06046) நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 25 அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு சென்னை சென்று சேரும்.  இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌ இந்த ரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

- விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன் - அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!



Southern Railway: கிறிஸ்துமஸ் பண்டிகை; மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் இயங்கும். 

பராமரிப்பு பணிகளுக்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் (12641) மற்றும் மறுமார்க்கத்தில் 
ஜனவரி 13, 15, 20, 22, 27, 29,  பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் (12642) ஆகியவை வழக்கம்போல் இயங்கும். இந்த ரயில்கள், வடக்கு ரயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில் பாதை மற்றும் சைகை (Signal) மேம்பாட்டு பணிகளுக்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பனை விதையில் அழகான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, அசத்தல் விழிப்புணர்வில் மதுரையின் பசுமை ஆர்வலர்

 

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget