மேலும் அறிய

TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?

TN Election 2026 Voter List: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இனியும் கூட எப்படி? எந்த தேதி வரை? விண்ணபிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TN Election 2026 Voter List: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இனியும் கூட விண்ணப்பித்து தேர்தலில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2026 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது, தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள், இனியும் கூட விண்ணப்பித்து இந்த தேர்தலிலேயே வாக்களிக்கும் உரிமையை பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வாக்காளர் பட்டியல் - விண்ணபிக்க கடைசி தேதி எப்போது?

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எல்லாம் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டாலும், தகுதியான நபர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்துவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுதாக்கலுக்கான இறுதி தேதிக்கான 10 நாட்களுக்கு முன்பு வரை, தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணபிக்கலாம். அதாவது, தமிழ்நாட்டில் வரும் மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வேட்புமனுதாக்கல் முடிவடைய உள்ளது. அதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை என்றால், மார்ச் 27ம் தேதி வரையில் தகுதியான நபர்கள் நேரடியாக சம்மந்தப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தேவையான ஆவணங்களை கொண்டு, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

2026 தேர்தலில் வாக்களிக்க முடியுமா?

மார்ச் 27ம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, அப்படி தேர்வானவர்களுக்கு என துணை வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். அவர்கள் இந்த தேர்தலிலேயே அதாவது வரும் ஏப்ரல் 23ம் தேதியே வாக்களிக்கலாம். ஆனால், மார்ச் 27ம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் தேர்ந்தல் முடிந்த பிறகே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே அவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு தகுதியான நபர்கள் வாக்குரிமையை உறுதி செய்துகொள்ள, வரும் மார்ச் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

வாக்காளர் அட்டை - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை

  • வாக்காளர் சேவை போர்டலில் முன்பதிவு செய்து உங்களது செல்போன் எண்ணிற்கு வரும் ஒடிபி மூலம் உள்நுழையுங்க்ள்
  • புதிய வாக்காளர் பதிவு என்ற டேபை க்ளிக் செய்து படிவம் 6-ஐ திறக்கவும்
  • தனிப்பட்ட, முகவரி மற்றும் குடும்ப விவரங்களை நிரப்புங்கள்
  • தேவையான வயது மற்றும் வசிப்பிடத்திற்கான சான்றுகளை பதிவேற்றம் செய்யுங்கள்
  • ஒருமுறை முழுமையாக ஆராய்ந்த பிறகு படிவத்தை சமர்ப்பியுங்கள்

இதையடுத்து படிவம் கிடைக்கப் பெற்றது என திரையில் தோன்றும் ஆவணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நேரடியாக விண்ணப்பிக்கும் முறை

வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக செல்பவர்கள்,

  • படிவம் 6-ஐ பெற்று முழுமையான தனிப்பட்ட மற்றும் வசிப்பிட விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்
  • வயது மற்றும் முகவரியை உறுதி செய்வதற்கான ஆவணங்களின் நகலை இணையுங்கள்
  • பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அலுவலகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பியுங்கள்
  • எதிர்கால பயன்பாட்டிற்காக அவரிடமிருந்து மனுவை பெற்றதற்கான ஒப்புகை ரசீதை வாங்கிக் கொள்ளுங்கள்

 பரிசீலனைக்குப் பிறகு உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை, இறுதியாக வெளியிடப்படும் துணை வாக்காளர் பட்டியலை ஆராந்து தெரிந்து கொள்ளலாம்.

பெயர் சேர்க்கப்பட்டதை அறிந்துகொள்வது எப்படி?

  • தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலில் உள்நுழைந்து, 'விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும்' என்ற டேபை க்ளிக் செய்யவும்
  •  திரையில் தோன்றும் பெட்டியில் உங்களது விண்ணப்ப எண்ணை பதிவிடவும்
  • உங்கள் விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பட்டியலில் உங்களது சேர்க்கப்பட்டதா? என்பது தொடர்பான விவரங்களை திரையில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • முகவரி சான்றிதழ் - நீர்/மின்சாரம்/keeS இணைப்பு பில் (குறைந்தது 1 வருடம் பழமையானது), ஆதார் அட்டை,  அஞ்சல் அலுவலக தற்போதைய பாஸ்புக்,பாஸ்போர்ட் பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகைப் பத்திரம் (குத்தகைதாரராக இருந்தால்), பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் (சொந்த வீடாக இருந்தால்)
  • வயது சான்றிதழ் - பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்ட், ஓட்டுநர் உரிமம், கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் (பிறந்த தேதி இருந்தால்),  பாஸ்போர்ட்
  • சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

ஆன்லைனில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள்  வாக்காளர் சேவை போர்ட்டலில் உள்ள e-EPIC சேவை மூலம் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.

  •  தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலில் 'e-EPIC பதிவிறக்கம்' பிரிவுக்குள் நுழையவும்
  • உங்களுக்கான EPIC எண் அல்லது சமர்பித்த படிவத்தின் எண்ணை பூர்த்தி செய்யுங்கள்
  • OTP அனுப்பு' என்பதை க்ளிக் செய்தால் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் வரும்
  • பெறப்பட்ட ஒடிபியை குறிபிட்ட இடத்தில் நிரப்பி 'சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யுங்கள்
  • இறுதியாக டிஜிட்டல் வாக்காளர் ஐடியைப் பதிவிறக்க 'e-EPIC ஐப் பதிவிறக்கு' என்பதை க்ளிக் செய்யுங்கள்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
Embed widget