Southern Railway: இனி கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு வாராந்திர ரயில்! ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!
கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு செல்லும் வாராந்திர ரயிலை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
![Southern Railway: இனி கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு வாராந்திர ரயில்! ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர்! Weekly train service to Kashi via Madurai started Southern Railway: இனி கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு வாராந்திர ரயில்! ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/e8121446e7815763d20d1a0406b060291688545036382184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக காசிக்கு ஒரு வாராந்திர ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை ( டிசம்பர் 17 ) முதல் துவக்கப்பட உள்ளது. இந்த கன்னியாகுமரி - பனாரஸ் - கன்னியாகுமரி வாராந்திர ரயில் சேவை கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை துவங்க இருக்கிறது.
#railway | பிரதமர் மோடி அவர்கள் நாளை 17.12.23 கன்னியாகுமரி - பனாரஸ் - கன்னியாகுமரி காசி தமிழ் சங்கனம் விரைவு ரயில் தொடக்க ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
— arunchinna (@arunreporter92) December 16, 2023
Further reports to follow - @abpnadu@SRajaJourno | @drmmadurai | @GMSRailway | @RailMinIndia @LPRABHAKARANPR3 pic.twitter.com/ZiGTw4eNEo
தொடங்கி வைக்கிறார் பிரதமர்:
இந்த துவக்க விழா சிறப்பு ரயிலை (06367) ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக துவக்கி வைக்கிறார். இந்த துவக்க விழா சிறப்பு ரயிலை வரவேற்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ரயில் ஆர்வலர்கள், பயணிகள் நல சங்கத்தினர், ரயில் பயணிகள், பொதுமக்கள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- போலீஸிடம் இருந்து தப்ப முயன்று பாலத்தில் இருந்து குதித்த ரவுடிக்கு கால் முறிவு - மதுரையில் பரபரப்பு
இந்தப் பகுதியில் வழக்கமான ரயில் சேவை டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை பனாரசிலிருந்து கன்னியாகுமரி விரைவு ரயில் (16368) இயக்கப்பட இருக்கிறது. மறு மார்க்கத்தில் டிசம்பர் 28 வியாழக்கிழமை முதல் கன்னியாகுமரியில் இருந்து பனாரஸ் காசி எக்ஸ்பிரஸ் (16367) சேவை துவங்க உள்ளது. இந்த வழக்கமான வாராந்திர ரயில் மதுரை கோட்ட பகுதியில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். துவக்க விழா சிறப்பு ரயிலுக்கான பயணச் சீட்டு முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது.
ஆன்மீகம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - உசிலம்பட்டி பழனியாண்டவர் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா..
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - முல்லைப்பெரியாறு அணையில் போதியளவு நீரிருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்க முடியாது - தங்க தமிழ்செல்வன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)