மேலும் அறிய
Top 10 News Headlines: சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Mar.16th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- "திமுகவுக்கு ஆதரவாக மிகப்பெரிய அலை உருவாகியுள்ளது" - சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
- கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை இனி தமிழ்நாட்டிலேயே வைக்க CBI-யிடம் விஜய் கோரிக்கை. தேர்தல் காலம் என்பதால் அடிக்கடி டெல்லி வந்து செல்வதில் சிரமம் இருப்பதால், தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை.
- "NDA கூட்டணி குறித்து கட்சியில் எந்த விவாதமும் நடைபெறவில்லை" - கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன்.
- சென்னையில் இருந்து இன்று அதிகாலை துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் துபாய் விமானநிலையம் அருகே நடந்த தாக்குதலை அடுத்து அவசரமாக மீண்டும் சென்னை திரும்பியது
- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை. வெள்ளி விலை கிராமிற்கு 4 ரூபாய் குறைந்து 276 ரூபாய்க்கு விற்பனை.
- தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமல்; சென்னை முழுவதும் நள்ளிரவில் தீவிர வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்ட தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள்.
- ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் SCB மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு. 5 பேர் நிலைமை கவலைகிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு. மாநில முதலமைச்சர் மான்ஜி நேரில் சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல்.
- இந்தியாவிடமிருந்து மேலும் 45,000 டன் டீசலலை இறக்குமதி செய்கிறது வங்கதேசம். ஏற்கனவே 5,000 டன் டீசலை குழய் மூலம் இந்தியா அனுப்பிய நிலையில், தற்போது கூடுதலாக ஏற்றுமதி.
- துபாய் விமான நிலையம் அருகே நடந்த திடீர் ட்ரொன் தாக்குதலால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தகவல்.
- ஹார்முஸ் நீரியை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்பும்ம திட்டம் இல்லை என ஜப்பான், ஆஸ்திரேலியா அறிவிப்பு. இதுவரை எந்த நாடும் முன்வராததால் ட்ரம்ப்புக்கு பின்னடைவு.
- தான் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று புதிய வீடியோவை வெளியிட்ட நிலையில், அதுவும் போலி என நெட்டிசன்கள் ஆதாரங்களை அடுக்கி வருகின்றனர்.
- சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றத அவதார் ஃபையர் அண்ட் ஆஷ் திரைப்படம்.
- 1998-ம் ஆண்டு முதல் 11 முறை பரிந்துரைக்கப்பட்டு, முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன். One Battle After Another திரைப்படத்திற்காக 3 விருதுகளை வென்று அசத்தல்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















