மேலும் அறிய

TN Election: 2021 Vs 2026 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் என்ன வித்தியாசம் - வாக்காளர் தொடங்கி வாக்குப்பெட்டி வரை

TN Election 2026 Schedule: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 2021 மற்றும் 2026-க்கு இடையே உள்ள வித்தியாசங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Election 2026 Schedule: 2021 மற்றும் 2026-க்கு இடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ள வித்தியாசங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்:

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரு ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதனால், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இதனிடையே, 2021 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

 2021 Vs 2026 - தேர்தல் அட்டவணை

தேர்தல் நிகழ்வுகள் 2021 சட்டமன்ற தேர்தல் அட்டவணை 2026 சட்டமன்ற தேர்தல் அட்டவணை
வேட்புமனு தாக்கல் செய்வதை தொடங்குவதற்கான நாள் 12.03.2021 30.03.2026
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 19.03.2021 06.04.2026
வேட்புமனு மறுபரீசிலனை 20.03.2021 07.04.2026
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 22.03.2021 09.04.2026
வாக்குப்பதிவு தேதி 06.04.2021 23.04.2026
வாக்குகள் எண்ணும் தேதி 02.05.2021 04.05.2026

2021 Vs 2026 - தேர்தலில் குறைந்த காத்திருப்பு

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, தேர்தல் முடிவுகளை அறிய சுமார் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால், இம்முறை 10 நாட்களிலேயே பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த முறை பிப்ரவரி மாதம் 26ம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் தொடங்கியது. ஆனால், இந்த முறை சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் காரணமாக, மார்ச் 15ம் தேதி தான் தேர்தல் அட்டவணையே வெளியாகியுள்ளது. இதனிடையே, வழக்கமாக புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால், இந்த முறை புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதியும், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 2021 Vs 2026 - வாக்காளர் விவரங்கள்

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 6 கோடிக்கும் அதிகமாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது, 5 கோடியே 76 லட்சத்துக்கு குறைந்துள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 

வாக்காளர் விவரங்கள் 2021 சட்டமன்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல்
மொத்த வாக்காளர்கள் சுமார் 6.28 கோடி சுமார் 5.67 கோடி
ஆண் வாக்காளர்கள் சுமார் 3.08 கோடி சுமார் 2.77 கோடி
பெண் வாக்காளர்கள் சுமார் 3.18 கோடி சுமார் 2.89 கோடி
முதல் முறை வாக்காளர்கள் சுமார் 8.97 லட்சம் 12, 51,749
மூன்றாம் பாலினத்தவர் சுமார் 7,200 சுமார் 7,617
மிகப்பெரிய தொகுதி சோழிங்க நல்லூர் (சுமார் 6.94 லட்சம் வாக்காளர்கள்) சோழிங்க நல்லூர் (சுமார் 5.36 லட்சம் வாக்காளர்கள்)
சிறிய தொகுதி சென்னை துறைமுகம் (சுமார் 1.7 லட்சம்) சென்னை துறைமுகம் (சுமார் 1.16 லட்சம்)

2021 Vs 2026 - முதலமைச்சர் வேட்பாளர்கள்

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர்  மு.க. ஸ்டாலின், அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறங்கினர். இதுபோக நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மற்றும் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் ஆகியோரும் முதலமைச்சர் வேட்பாளர்களாக களம் கண்டனர். ஆனால் இந்தமுறை கமல்ஹாசன் இடத்திற்கு விஜய் வந்துள்ளார். அதேநேரம், மக்கள் நீதிமய்யமோ திமுக கூட்டணியில் இரண்டு இடங்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் அதிமுகவிற்கு எதிராக கூட்டணியை உருவாக்கி தீவிரமாக களமாடிய டிடிவி தினகரன், இந்த முறை எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக அங்கீகரித்து கூட்டணியில் இணைந்துள்ளது.  அதன் முடிவில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget