மேலும் அறிய
Advertisement
மதுரை பள்ளிகளில் அடுத்தடுத்து அச்சுறுத்தும் வெடிகுண்டு மிரட்டல்: குற்றவாளியை கண்டறிவதில் சிக்கல்
கோவை வெடிகுண்டு சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் தீபாவளி நெருங்கும் நேரத்தில் தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் அச்சத்திற்கு ஆளாகும் பொதுமக்கள்.
மதுரையில் பள்ளிகளில் அடுத்தடுத்து அச்சுறுத்தும் வெடிகுண்டு மிரட்டல்கள் - கலக்கத்தில் பெற்றோர்கள் - மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணாக்கர்கள் - குற்றவாளியை கண்டறிவதில் நீடிக்கும் சிக்கல்.
வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயிலில் மிரட்டல்
கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி, பொன்மேனி ஜீவனா மற்றும் வேலம்மாள் போதி கேம்பஸ்பள்ளி , நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள KMR ஆகிய நான்கு பள்ளிகளில் கடந்த திங்கள்கிழமை வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலமாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று மதுரை சின்னசொக்கிகுளம் JC RESIDECY மற்றும் காளவாசல் ஜெர்மானூஸ், பெரியார்பேருந்து நிலையம் மதுரை ரெசிடன்சி) மற்றும் பெருங்குடி அமீகா ஆகிய 4 நட்சத்திர தங்குவிடுதிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயிலில் மிரட்டல் வந்தது. இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் காவல்துறையினர் உதவியுடன் தங்கு விடுதிகளில் உள்ள பைப் லைன்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
வெடிப்பொருட்களும் சிக்கவில்லை
இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டம் பேச்சிகுளம் பகுதியில் உள்ள மதுரை பப்ளிக் பள்ளிக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அவசர அவசரமாக மாணவர்கள் பெற்றோர்கள் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று அந்த பள்ளிக்கும் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நான்காவது வெடிகுண்டு மிரட்டல் சம்பவமாக மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அரபிந்தோ மீரா பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நேரில் சென்று சோதனை நடத்தியதில் எந்த வெடிப்பொருட்களும் சிக்கவில்லை வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மாணாக்கர்கள் அவசர அவசரமாக பெற்றோர்கள் உதவியுடன் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விசாரணை தீவிரம்
மதுரை மாவட்டத்தில் 4 முறை பள்ளிகள் மற்றும் நட்சத்திர தங்குவிடுதிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொடர்ந்து இ-மெயில் மூலமாக தொடர்ந்து மிரட்டல் வந்துள்ள நிலையில் நாள்தோறும் காவல்துறையினரும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இ-மெயில் மூலமாக தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில் மிரட்டல் இ-மெயில் அனுப்பிய நபர் தனி நபரா இல்லை ? வேறு ஏதேனும் சமூக விரோத குழுக்கள் மூலமாக இதுபோன்று மிரட்டல் விடுக்கப்படுகிறதா என்ற கோணங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். மதுரை தொடங்கி தமிழக முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் இமெயில் மூலமாக அனுப்பப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக மதுரையில் மட்டுமே இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் தொடங்கியதால் இது போன்ற மிரட்டல் இ-மெயில்கள் VPN மூலமாக பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளதா ? என்ற அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விரைவாக கண்டறிய கோரிக்கை
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் கோவை கார் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி நெருங்கும் நேரத்தில் தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற தொடர் மிரட்டல்களில் ஈடபடும் நபர்களை விரைந்துகைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
விளையாட்டு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion