மது போதை தகராறு; இருதரப்பு மோதலாக வெடித்தது!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களம் கிராமத்தை சேர்ந்த இரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில் மது குடித்த போது வாய்த்தகராறு ஏற்பட்டது.
மது குடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறால் இரு சமுதாயத்தினரிடையே மோதாலாக மாறி மோதிக்கொண்டதில் 2 இளைஞர்கள் காயமடைந்தனர் . தாக்கியவர்களை கைது செய்ய கோரி ஒரு சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மோதல் ஏற்படாதவாறு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களம் கிராமத்தை சேர்ந்த இரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில் மது குடித்த போது மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. சாதாரண பேச்சு வார்த்தை சண்டையாக மாறியதால், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பை தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த சில இளைஞர்கள், தாக்கியவர்களை திருப்பித் தாக்க குடியிருப்பு பகுதிக்கு சென்றதாகவும் இதனால் இரு சமுதாயத்தினருக்கும் மோதல் ஏற்பட்டத்தில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயம் அடைந்த இளைஞர்களின் சமுதாய மக்கள் தாக்கியவர்களை கைது செய்ய கோரி பெரியகுளம் ஆண்டிபட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிம் பேச்சுவாரத்தை நடத்தி தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டனர்.
மேலும் இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இளைஞர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து சம்பவ இடத்தை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் பார்வையிட்டு மோதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மேலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று இப்பகுதிகளில் அவ்வப்போது இரு தரப்பு பிரிவினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வருகிற நிலையில் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் தனி கவனம்கொண்டு இது போன்ற சம்பவங்கள் நடக்காவண்ணம் கண்காணிக்க வேண்டுமென்று இப்பகுதி மக்களிடையே கோரிக்கையும் எழுந்துள்ளது. மது போதையில் ஜாலியாக துவங்கி சண்டை, இருதரப்பு மோதலாக மாறும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sasikala Poster : ’சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்’ ஒபிஎஸ் சொந்த ஊரில் பரபரப்பு..!
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததாக கூறி அடக்கம் செய்ய போன இடத்தில் குழந்தை உயிருடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்.
தெரிந்துகொள்ள
வாளிக்குள் மடக்கி வைத்து அனுப்பப்பட்ட குழந்தை - மயானத்தில் துடித்த இதயம்