மேலும் அறிய
Advertisement
Madurai: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்; வைகை ஆற்றில் முன்னேற்பாடுகள் படுதீவிரம்..!
ஆற்றிக்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ஆழ்வார்புரம் பகுதியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
கள்ளழகர் சித்திரைத் திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றின் எழுந்தருளும் பகுதியில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கி 10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 5ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியானது நடைபெறும். இதற்காக வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
— arunchinna (@arunreporter92) May 1, 2023
Further report's to follow - @abpnadu #madura | #vaikai #வைகை #சித்திரைத்திருவிழா2023 #Chithiraithiruvizha @LPRABHAKARANPR3 pic.twitter.com/rLEBjPDYxf
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்:
ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் வர்ணம் தீட்டும் பணிகள் மற்றும் வைகை ஆறு பகுதிகளில் தேங்கியிருக்கக்கூடிய கழிவுகளை அகற்றும் பணிகளானது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆழ்வார்புரம் அருகே வைகையாற்று பகுதியில் அமைக்கப்படக்கூடிய மண்டகப்படி உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது.
நேற்று முன்தினம் வைகை அணையில் இருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று ஆற்றிக்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ஆழ்வார்புரம் பகுதியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Madurai: ’அவைத்தலைவரின் கருத்து வைகோவின் கருத்துக்கு எதிரானது’ - மதுரை மதிமுக எம்எல்ஏ காட்டம் !
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மணல் மாஃபியா கும்பலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்புப் படை அமைக்க வேண்டும்” - தொல்.திருமா வேண்டுகோள் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion