”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறைதண்டனை விதித்த திருவாரூர் நீதிமன்றத்தால் பரபரப்பு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆவார். இவர் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர், தேவைபட்டால் அவ்வபோது போராட்டத்தை முன்னின்று நடத்தி வருவார். இவர் சமீபத்தில் கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட இயற்க்கை விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மோடியை புகழ்ந்து பேசியது வைரலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் அரசு அதிகாரிகளை மிரட்டுதல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பி ஆர் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை கடந்த 10 வருடமாக விசாரித்து வந்த திரூவாரூர் நீதிமன்றம் 13 ஆண்டிகள் சிறை தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள காரியமங்கலம் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு தொடங்கியது. மேலும் அந்த பகுதியில் எண்ணெய் குழாய் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு அப்போதைய தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளரான பி.ஆர் பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது பொது சொத்தை சேதப்படுத்தியதாக பி.ஆர் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவராக இருந்த செல்வராஜ் உட்பட 22 பேர் மீது விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் பி.ஆர் பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு 13 ஆண்டிகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பை அடுத்து இருவரையும் தற்போது மத்திய சிறைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.





















