மேலும் அறிய

”மணல் மாஃபியா கும்பலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்புப் படை அமைக்க வேண்டும்” - தொல்.திருமா வேண்டுகோள் !

தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபானம் வகைகளை பெற முடியும் என்கிற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. -தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தொழிலாளர் நலன்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தொழிற்சங்க தலைவர்களின் உணர்வுகளை மதித்து, அரசியல் கட்சித் தலைவர்களின் உணர்வுகளை மதித்தும் முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். முதல்வரின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்று பாராட்டுகிறோம்.
 
இந்திய ஒன்றிய அரசு தொழிலாளர் நலன் குறித்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக தொகுத்துள்ளன. அந்தத் தொகுப்பு சட்டத்தில் தொழிலாளர் நலன்களுக்கு எதிராக உள்ள பகுதிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு முன்னதாக ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

”மணல் மாஃபியா கும்பலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்புப் படை அமைக்க வேண்டும்” - தொல்.திருமா வேண்டுகோள் !
 
நாளை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இலக்காக வைத்து அங்குள்ள தமிழர்களிடையே விசிக சார்பாக வாக்கு சேகரிக்க உள்ளேன். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவக்குமார் முறைப்படி கடிதம் எழுதி இருக்கிறார் அதன் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறேன். தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவை மையமாக வைத்து பாஜக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை குறிவைத்து மதத்தின் அடிப்படையில் வெருப்பு அரசியலை விதைத்து வருகிறது. அதை அவர்கள் ஒரு களமாக பயன்படுத்துகின்றனர்.
 
எனவே கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவது தென் மாநிலங்களில் நலன்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் மக்கள் அந்த முடிவில் இருக்கிறார்கள் என்றாலும் பாஜகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான களத்தில் காங்கிரஸோடு விடுதலை சிறுத்தைகள் கை கோர்க்கிறது.

”மணல் மாஃபியா கும்பலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்புப் படை அமைக்க வேண்டும்” - தொல்.திருமா வேண்டுகோள் !
 
தெலுங்கானா முதல்வர் கே.சி.ராவ் புதிதாக கட்டி எழுப்பியிருக்கிற தலைமைச் செயலகத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரைச் சூட்டி இருக்கிறார். எனவே கே.சி.இராவ் அவர்களுக்கு மீண்டும் எங்களின் பாராட்டுகளையும் நன்றியையும் உருத்தாக்குகிறோம். ஏற்கனவே 125 அடி உயரத்தில் வெண்கல திருவள்ளுவர் சிலையை ஹைதராபாத்தில் திறந்து நாட்டுக்கு வழிகாட்டி இருக்கிறார். இந்திய மாநிலங்களிலேயே தெலுங்கானாவில் புரட்சியாளர் அம்பேத்கரின் கோட்பாடுகளுக்கு வலிமை சேர்க்கக் கூடிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் மனமார வரவேற்று பாராட்டுகிறோம்.

”மணல் மாஃபியா கும்பலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்புப் படை அமைக்க வேண்டும்” - தொல்.திருமா வேண்டுகோள் !
கர்நாடகாவில் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு..
 
இதற்கு அண்ணாமலை தான் பதில் சொல்ல வேண்டும் அவர் இருக்கும்போதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என ஈஸ்வரப்பா என்பவர் இடைமறித்து அதை நிறுத்தியுள்ளார். கன்னட வாழ்த்து பாடலை பாடச் சொல்வது அவர்களுக்கான உரிமை. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஒரு பகுதியில், ஒட்டுமொத்த தமிழ் வாக்காளர்களையும் அவமதிக்கக்கூடிய வகையில் அவர் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
 
புதிதாக தானியங்கி மது விற்பனையகம் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு
 
தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபானம் வகைகளை பெற முடியும் என்கிற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமும் இல்லை. மாண்புமிகு முதல்வர் இதை பரிசீலிக்க வேண்டும் படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ள இயக்கம் திமுக என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில்,  தேர்தல் வாக்குறுதியிலேயே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எனவே படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முதல்வர் முன்வர வேண்டுமே ஒழிய தானியங்கி எந்திரத்தின் மூலம் மது வகைகளை பிற வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஏற்படுவது அல்ல. 

”மணல் மாஃபியா கும்பலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்புப் படை அமைக்க வேண்டும்” - தொல்.திருமா வேண்டுகோள் !
 
பிரதமர் மோடியின் நூறாவது மன் கி வாக் நிகழ்ச்சியை ஒட்டி கலைஞர் எழுதிய செம்மொழி பாடல் ஒளிபரப்பப்பட்டது குறித்த கேள்விக்கு:
 
இது அவர்களின் தேர்தல் யுக்திகளில் ஒன்று உண்மையான தமிழ் ஒளி மீதான பற்று என்று சொல்ல முடியாது. திருக்குறளை பேசுவது, பாரதியார் பாடலை பேசுவது, அவ்வப்போது தமிழை இடையே எழுதி வைத்து இந்தியில் படிப்பது இவையெல்லாம் அவர்கள் கையாளக்கூடிய தேர்தல் தந்திரங்களில் ஒன்று. இந்தியை திணிக்க வேண்டும் என்பதும், சமஸ்கிருதத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான்.
 
தூத்துக்குடி விஏஓ படுகொலை குறித்த கேள்விக்கு
 
இது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய ஒரு சம்பவம். மணல் மாஃபியா கும்பல் விஏஓ கொடூரமாக தாக்கிப்படுகொலை செய்திருக்கிறார்கள். இதை விசிக மிக வன்மையாக கண்டிக்கிறது. அந்தக் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்குவதோடு, அவர் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். மணல் மாஃபியா கும்பல் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு அரசு சிறப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget