Vijay Sethupathi: ரோகிணி தியேட்டர் விவகாரம்; ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்கவே முடியாது - கொந்தளித்த விஜய்சேதுபதி
எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டு உள்ளது என்று விஜய்சேதுபதி கூறியுள்ளார்.
முதலமைச்சர் மீது மரியாதை:
உலகத்திலேயே திமுகவில் தான் முதன்முதலாக இளைஞரணி துவங்கப்பட்டது என்ற விபரம், திமுக ஆட்சி காலத்தில் அதிகமான பாலங்கள் கட்டியது, பெரியார், அண்ணா போன்ற தலைவர்களுடன் அவர் இருந்த காட்சிகள் ஈர்க்கும் வகையில் இருந்தது. எனக்கு முதலமைச்சர் மேல் ஏற்கனவே மரியாதை உண்டு. இந்த கண்காட்சியை பார்த்த பின்னர், அவர் வாரிசு அரசியல் மூலம் தான் இந்த இடத்திற்கு வந்தார் என்ற கூற்று பொய் என தோன்றுகிறது. நான் அரசியலுக்கு வரும் போது இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து சொல்வேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை" என தெரிவித்தார்.
ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு,
"எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டு உள்ளது. அதில் வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Aishwarya Rajinikanth: 60 இல்லயாம்.. 200 சவரன் தங்கமாம்..! ரஜினிகாந்த் மகள் வீட்டு கொள்ளை வழக்கில் புதிய திருப்பம்..!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்