உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழகத்தில் 3 நாட்களில் மூடப்படும் அபாயம்! அமைச்சர் பதில் என்ன?
ஒன்றிய அரசைப் பார்த்து தான் சிலிண்டர் தட்டுப்பாடு கேட்க வேண்டும். மத்திய இணை அமைச்சர் எல். முருகனையும், பிரதமர் மோடியை பார்த்து கேளுங்கள் - அமைச்சர் சக்கரபாணி பேட்டி
இந்தியா முழுவதும் தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தங்களிடம் கேஸ் சிலிண்டர் இல்லை என நோட்டிஸ் அனுப்பி உள்ளது. எனவே தற்போது இருக்கக்கூடிய இருப்புகளை வைத்து இரண்டு நாட்கள் மட்டுமே தங்களால் தாக்குப் பிடிக்க முடியும். கொரோனா காலங்களில் கூட எங்களால் உணவு தயாரிக்கும் சூழல் இருந்து வந்தது ஆனால் தற்போது ஹோட்டல் இண்டஸ்ட்ரியே மூடு அளவிற்கு தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொருத்தமட்டில் பத்தாயிரம் உணவகங்களில் 5 லட்சம் பணியாளர்கள் இந்த தொழிலை நம்பி இருந்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஹோட்டல் தொழிலை நம்பி இருக்கும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கடும் அவதிக்குள்ளாவர். இந்த நிலை மாற மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை அனைத்து உணவகங்களிலும் நேர கட்டுப்பாடு மற்றும் உணவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. என உணவக சங்கத்தினர் ஆங்கேங்கே தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மதுரை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதே போல் மதுரை, திண்டுக்கல் முக்கிய உணவுப் பொருளாக பார்க்கப்படும் டீ - காபி கடைகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திண்டுக்கல்லில் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம் மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணியிடம் நிருபர்கள் கேட்டபோது, ஒன்றிய அரசைப் பார்த்து தான் சிலிண்டர் தட்டுப்பாடு கேட்க வேண்டும். மத்திய இணை அமைச்சர் எல். முருகனையும், பிரதமர் மோடியை பார்த்து கேட்க வேண்டும்.
"எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். எண்ணெய் நிறுவனங்களிடம் தற்போது எவ்வளவு சிலிண்டர் கையிருப்பு உள்ளது, தட்டுப்பாட்டைப் போக்க எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து விரிவாகக் கேட்டறியப்படும். அதன் பிறகு, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும், சிலிண்டர் விநியோகத்தை வேகப்படுத்துவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்" என அவர் தெரிவித்தார். மேலும் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ செந்தில் பாலாஜிக்கு சமன் அனுப்பிய குறித்து கேள்வி எழுப்பிய போது பதில் கூறாமல் மறுத்து சென்று விட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















