மேலும் அறிய
Advertisement
மதுரையில் கிடைத்த சதுரவடிவ லிங்கம்...! விருதுநகரில் கிடைத்த சதிக்கல்...!
’’கொந்தகை கால்வாய் பகுதியில் உள்ள சாலையை தோண்டியுள்ளனர். அப்போது சுமார் 2-அடி உயரமுள்ள சதுஸ்ர லிங்க கற்சிலை ஒன்று கிடைத்துள்ளது’’
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகில் புரசலூரில் பள்ளிக்கூட சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பள்ளம் தோண்டிய போது, ஒரு சிற்பம் வெளிப்பட்டது. அதனை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறுகையில், திருச்சுழி புரசலூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிற்பம் உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு வைக்கப்பட்ட சதிக்கலாகும். இதன் அமைப்பை கொண்டு இது கி.பி.17ம் நூற்றாண்டை சேர்ந்தது எனலாம். இப்பள்ளியின் வடக்குப்பகுதியில் ஏற்கனவே இரு சதிக்கற்கள் மக்கள் வழிபாட்டில் உள்ளது.
சென்ற ஆண்டு இவ்வூரில் கி.பி.13 ஆம்நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுகள் கண்டுபிடிக் கப்பட்டதாக" தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரையில் சாலை பணியின்போது சதுர வடிவ சிவலிங்கம் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிற்பம் கி.பி 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மதுரை தெப்பக்குளம் முதல் விரகனூர் இடையே சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஐராவதநல்லூர் இந்திராகாந்தி சிலை அருகே கொந்தகை கால்வாய் பகுதியில் உள்ள சாலையை தோண்டியுள்ளனர். அப்போது சுமார் 2-அடி உயரமுள்ள சதுஸ்ர லிங்க கற்சிலை ஒன்று கிடைத்துள்ளது.
இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தனர். இதனையடுத்து அந்த சிவன் சிலை ஐராவதநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் மூலமாக தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது
மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கங்கைக்காக பரிசுப்பொருட்கள் ஏலம்... “பாரதத்தை ஏலம்போட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொடு!”.. மதுரை எம்.பி ட்வீட்டில் காட்டம்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டி கூறுகையில், முதற்கட்ட ஆய்வில் சதுர வடிவ லிங்க வழிபாடு கிபி 10 மற்றும் 11ஆம் ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதால் இது கிபி 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் முழுமையான ஆய்வுக்கு பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
சேலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion