மேலும் அறிய
Advertisement
கங்கைக்காக பரிசுப்பொருட்கள் ஏலம்... “பாரதத்தை ஏலம்போட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொடு!”.. மதுரை எம்.பி ட்வீட்டில் காட்டம்
கங்கையை சுத்தப்படுத்த பிரதமர் மற்றும் விளையாட்டு வீரர்களின் பரிசுப்பொருட்கள் ஏலம் - ட்வீட்டில் விமர்சனம் செய்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்.
பிரதமர் நரேந்திரமோடி 2014-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றபோது, இந்தியாவின் ஜீவநதியான கங்கையை சுத்தப்படுத்துவேன் என அறிவித்திருந்தார். கழிவுநீர், குப்பை போன்றவற்றால் மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கங்கையை தூய்மைப்படுத்தும் பணிக்காக மத்திய அரசு தேசிய திட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. கங்கையை சுத்தப்படுத்த 26 திட்டங்களுக்கு மேல் வகுக்கப்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து இந்த அமைப்பு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இதை சற்று கவனிக்கவும்- *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
மேலும் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கங்கையில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை20 ஆயிரம் கோடி கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்த செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தபால் ஊழியர் நியமனத்திற்கு தமிழ் தேர்ச்சி தேர்வு: மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!
இந்நிலையில் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்காக பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் பிரபல விளையாட்டு வீரர்கள் பெற்ற பரிசுகளை ஏலம் விடுவதாக கூறப்படுகிறது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கங்கையை சுத்தப்படுத்துவதற்காக பிரதமருக்கு வந்த பரிசுகளையும், நமது விளையாட்டு வீரர்கள் பெற்ற பரிசுகளையும் ஏலம் விட்டு கொண்டிருக்கிறார்கள்.
கங்கையை சுத்தப்படுத்துவதற்காக பிரதமருக்கு வந்த பரிசுகளையும், நமது விளையாட்டுவீரர்கள் பெற்ற பரிசுகளையும் ஏலம் விட்டு கொண்டிருக்கிறார்கள் .
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 20, 2021
பரிசுப்பொருளை ஏலம்போட்டு கங்கைக்கு கொடு!
பாரதத்தை ஏலம்போட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொடு!
இது தான் அரசின் பொது முழக்கம்! #Ganga #Corporate pic.twitter.com/4GiwUgVart
பரிசுப்பொருளை ஏலம்போட்டு கங்கைக்கு கொடு, பாரதத்தை ஏலம்போட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொடு. இதுதான் அரசின் பொது முழக்கம் என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
வணிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion