மேலும் அறிய
Advertisement
‛ரூ.500 கோடி கல்விக் கடன்...முன்மாதிரியாக மாறும் மதுரை...’ - சு.வெங்கடேசன் எம்.பி.,!
மாவட்ட அளவிலான கல்விகடன் வழிகாட்டுதல் மையம் மூலமாக நேரிலையோ, தொலைபேசி எண், மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் பெறலாம்” என்றார்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகளின் மூலமாக கல்விகடன் வழங்குவது தொடர்பாக கல்விசார் நிலைக்குழு உறுப்பினரும் மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மற்றும் அனைத்து வங்கி உயர் அதிகாரிகளும், கல்வித்துறையினரும் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் கலந்துகொண்டனர்.
சு.வெங்கடேசன் எம்.பி. பேசுகையில் செய்தியாளர்களிடம்...,” மதுரை மாவட்டத்தில் 500கோடி ரூபாய் அளவிற்கு கல்விக்கடன் வழங்க முடிவு செய்துள்ளோம். மாவட்டத்தில் இந்தாண்டு உயர்கல்வி படிக்கவுள்ள 20ஆயிரம் மாணவர்களில் கல்வி கடன் தேவைப்படும் அனைவருக்கும் கல்விக்கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். மதுரையில் 500 கோடி கல்விகடன் வழங்கி தமிழ்நாட்டில் முன்மாதிரியாக மாற்றவுள்ளோம். கிராமப்புற மாணவர்களுக்கு கல்விக்கடனை பெறுவது கடினமாக உள்ளதால் அதனை எளிதாக்கும் வகையில் அனைத்து மேல்நிலைபள்ளிகளிலும் கல்வி கடன் பெறுவது குறித்த ஆலோசனைகள் வழங்க ஒரு ஆசிரியர் நியமிக்கப்படும், மாணவர்களுக்கான வித்யாலெட்சுமி போர்டல் பதிவு போன்ற உதவிகளை செய்ய வட்டார அளவிலும், மண்டல அளவிலும் கல்விக் கடன் வழிகாட்டு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.,
இதேபோன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கல்விகடன் வழிகாட்டுதல் அதிகாரி நியமனம் செய்யபடவுள்ளர். கல்விக்கடன்கள் பெறுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம் இதேபோன்று கல்விகடன் அதிகம் வழங்குவதில் மாநிலத்தில் மதுரை முன்மாதிரியாக மாற்ற முயற்சி செய்வோம். கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மாணவன் கல்வியை பயில முடியாது என்ற நிலை மாற வேண்டும். கார்ப்பரேட்களுக்கு பல கோடியை கடனாக பெற்று எடுத்துசென்றுவிடுகிறார்கள்., ஆனால் மாணவர்களுக்கு கல்விகடன் கிடைப்பது கடினமாக உள்ளது. மாவட்ட அளவிலான கல்விகடன் வழிகாட்டுதல் மையம் மூலமாக நேரிலையோ, தொலைபேசி எண், மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் பெறலாம்” என்றார்.
கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் உயர்கல்வி பறிபோகக்கூடாது.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 25, 2021
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கிட இலக்கு!
ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையம், ஒவ்வொரு பள்ளியிலும் தனி அலுவலர், வட்டார மண்டல அளவில் வங்கி & கல்வித்துறை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் pic.twitter.com/HXB6og9xkE
மேலும் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி 6ஆம் வகுப்பு குடிமையியல் தேர்வில் இஸ்லாமிய பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ”பாடத்தில் என்ன இருக்கிறது. என்ன அர்த்தத்தில் கேட்கப்பட்டது என்பது குறித்தும் பள்ளி முதல்வரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். வறுமையும், பொருளாதார நிலையும் தான் இஸ்லாமிய பெண்கள் கல்வி கற்க முடியாத நிலை என பாடத்தில் சரியாக உள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் கேட்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் வெளியானது போன்று தான் கேட்கப்பட்டதா என முதல்வரிடம் விளக்கமும், வினாத்தாள் நகலும் கேட்டுள்ளோம்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion