Tourist Train Fire Accident : மதுரையில் சுற்றுலா ரயிலில் பயங்கர தீ விபத்து 9 பேர் உயிரிழப்பு ? காரணம் என்ன..? தீவிர விசாரணை..!
லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் ஆன்மீக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் தேனீர் வைத்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்து 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மிக்க வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க இந்திய ரயில்வே பாரத் கவுரவ் என்ற ஆன்மிக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. அனுபவம் வாய்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் அதிகளவு ஆன்மீக சுற்றுலா ரயில்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான வருவாய் ரயில்வே நிர்வாகத்திற்கு கிடைத்துவருகிறது. பயணத்திற்கான இடம், சைவ உணவு, உள்ளூர் பேருந்து வசதி என பல்வேறு வசதிகளை பேக்கேஜிங் முறையில் செய்து கொடுக்கின்றனர்.
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாகவும் தகவல். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்; மேலும் இருவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் #madurai #fire #train @abpnadu pic.twitter.com/o9lFy9xjXb
— arunchinna (@arunreporter92) August 26, 2023























