JSW Jetour T2: ஃபார்ட்சுனர், தார் மாடலை நான் அடிக்கிறேன்.. ரக்கட் ஆன ஜெடூர் T2.. JSW-வின் புதிய ஹைப்ரிட் கார்
JSW Jetour T2 Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் JSW நிறுவனத்தின் முதல் கார் மாடலாக ஜெடூர் T2 விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

JSW Jetour T2 Hybrid SUV: JSW நிறுவனத்தின் ஜெடூர் T2 கார் மாடல் உள்ளூர் சந்தையில் ஃபார்ட்சுனர் மற்றும் தார் கார் மாடலுடன் போட்டியிட உள்ளது.
JSW ப்ராண்டின் ஜெடூர் T2 கார் மாடல்
JSW குழுமத்தின் சுதந்திரமான பயணிகள் வாகன பிரிவான JSW மோட்டார்ஸ் நிறுவனம், தனது முதல் கார் மாடலை நடப்பாண்டில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி அந்த முதல் மாடலானது ஜெடூர் T2 எஸ்யுவி என கூறப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் தனித்துவமான கார் உற்பத்தியாளராக உருவெடுக்க வேண்டு என JSW இலக்கு நிர்ணயித்துள்ளது. எம்ஜி நிறுவனத்துடன் இருந்து கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருவதில் இருந்து தனிப்பட்டு, T2 எஸ்யுவி தனித்துவமாக சந்தைபடுத்தப்பட உள்ளதாம். குறிப்பாக ஜெடூர் ப்ராண்டிற்கு பதிலாக JSW என்றபேட்ஜை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் அமைய உள்ள ப்ராண்டின் க்ரீன்ஃபீல்ட் உற்பத்தி ஆலையில், இந்த புதிய கார் அசெம்பிள் செய்யப்பட உள்ளதாம். தொடர்ந்து,நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டிலேயே இந்த எஸ்யுவி விற்பனைக்கும் கொண்டுவரப்பட உள்ளதாம்.
T2 எஸ்யுவி - இன்ஜின் விவரங்கள்
வெளிநாட்டு சந்தைகளில் முற்றிலும் இன்ஜின் அடிப்படையிலான T2 எஸ்யுவி கிடைக்கிறது. ஆனால், உள்நாட்டு சந்தையில் சஸ்டெய்னபிள் பிரிவில் JSW நிறுவனம் கவனம் செலுத்தி வருவதால், இந்திய சந்தைக்கு 1.5 லிட்டர் ப்ளக்-இன் பவர்ட்ரெயினில் i-DM எடிஷனில் T2 எஸ்யுவி சந்தைக்கு அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புள்ளதாம். கூடுதல் தகவல்கள் ஏதும் வெளியாகாவிட்டாலும் இந்த கார் ஆல்வீல் ட்ரைவ் மற்றும் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக 10 முதல் 15 லிட்டர் வரை மைலேஜ் வழங்குவதாகவும், 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கை ஃபுல் செய்தால் 600 முதல் 800 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

T2 எஸ்யுவி - அம்சங்கள், வசதிகள்..
பெரிய T2 எஸ்யுவி ஆனது பாரம்பரியமான பாக்ஸி, கூர்மையான டிசைன் என டிஃபெண்டரை பிரதிபலிக்கிறது. அந்த வகையில் இந்த காரும் லேடர் ஃப்ரேம் செட்-அப்பிற்கு பதிலாக மோனோகாக் கட்டமைப்பை கொண்டுள்ளது. 4.7 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்டு சஃபாரியை விட பெரிய அளவீடுகளை கொண்டுள்ளது. ஆனால், T2 எஸ்யுவி 5 சீட்டர் வடிவில் மட்டுமே உருவாகும் நிலையில், 7 சீட்டர் இன்னும் பெரியதாக எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் இந்த கார் எந்த பிரிவில் நிலைநிறுத்தப்படும் அந்த காரின் விலை என்ன என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை இல்லை. அதேநேரம், ஐக்கிய அரபு அமீரகத்தில் i-DM ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் 5 சீட்டர் எடிஷனானது, இந்திய மதிப்பில் சுமார் 35 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜெடூர் நிறுவனம் பற்றி..
சீனாவை மையமாக கொண்டு செரி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் ஒரு பகுதியாக, ஜெடூர் ப்ராண்ட் எஸ்யுவிக்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. கடந்த 2018ம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் தனது சந்தையை விரிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய சந்தையில் JSW நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, கூட்டுமுயற்சி மூலம் உள்நாட்டு சந்தையில் தனது கார் மாடல்களை விற்பனை செய்ய ஜெடூர் ப்ராண்ட் முடிவு செய்துள்ளது.






















