மேலும் அறிய
Advertisement
ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரயில்வே துறைக்கு இவ்வளவு கோடி வருமானமா..?
ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரயில்வே துறைக்கு ரூபாய் 6 கோடி வருமானம், ஏழாவது ஆன்மீக சுற்றுலா ரயில் கூடல் நகரில் இருந்து புறப்படுகிறது.
இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மிக்க வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க இந்திய ரயில்வே பாரத் கவுரவ் என்ற ஆன்மிக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. அனுபவம் வாய்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் இதுவரை ஆறு ஆன்மீக சுற்றுலா ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூபாய் 6.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
அதே போல் ஏழாவது ஆன்மீக சுற்றுலா ரயில் மதுரை கூடல் நகர் - பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் நிலையங்களிடையே இயக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில் தெலுங்கானா மௌலாளி, ஜெய்பூர், ஆக்ரா, அமிர்தசரஸ், கோவா போன்ற சுற்றுலா தலங்களை இணைத்து இயக்கப்படுகிறது. கூடல் நகர் - அமிர்தசரஸ் - கூடல் நகர் சுற்றுவட்ட சுற்றுலா ரயில் (06905/06906) கூடல் நகரில் இருந்து நவம்பர் 3 இன்று இரவு 07.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில்,
திருவனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், சேலம், காட்பாடி வழியாக சென்று நவம்பர் 6 அன்று மௌலாளி, நவம்பர் 8 அன்று ஜெய்ப்பூர், நவம்பர் 9 அன்று ஆக்ரா, நவம்பர் 10 அன்று டெல்லி, நவம்பர் 11 அன்று அமிர்தசரஸ், நவம்பர் 13 அன்று கோவா போன்ற சுற்றுலா தலங்களை இணைக்கிறது. பின்பு மங்களூர், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக நவம்பர் 16 அன்று அதிகாலை 02.30 மணிக்கு கூடல் நகர் வந்து சேருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி
மேலும் செய்திகள் படிக்க - Rain : மதுரையில் வெளுக்கத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை..! பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion