மேலும் அறிய

Chandrayaan 3 Rover: பிரக்யான் ரோவர் நிலவில் இதுவரை பயணித்த தூரம்.. அடுத்த அப்டேட் கொடுத்த இஸ்ரோ!

Chandrayaan 3 Rover: ரோவரில் உள்ள அனைத்து அறிவியல் ஆய்வுக் கருவிகளும் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

நிலவில் தரையிறங்கிய சந்திரயான் - 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர், 8 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

ரோவரின் முக்கியப் பகுதிகளான LIBS, APXS செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும்,  லேண்டர், உந்து விசைக்கலம், ரோவர் ஆகியவை திட்டமிட்டபடி சிறப்பாக செயல்படுவதாகவும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ட்வீட்டில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ரோவரில் உள்ள அனைத்து அறிவியல் ஆய்வுக் கருவிகளும் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Chandrayaan 3 Rover: பிரக்யான் ரோவர் நிலவில் இதுவரை பயணித்த தூரம்.. அடுத்த அப்டேட் கொடுத்த இஸ்ரோ!

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து, பிரக்யான் ரோவர் கருவி நிலவின் தென்துருவத்தில் 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்யப்போகிறது. நிலவில் உள்ள மண் மற்றும் பாறைகளின் தன்மைகளை ஆராய்ச்சி செய்வதற்கான கருவிகள் அதன் வேலைகளை தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரோவின் கனவுத்திட்டம் சாதனை

சந்திரயான் -3 விண்கலம் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் பிரிந்து 8 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.  சாய்வு தளம் மூலமாக ரோவர் தரையிறக்கப்பட்டது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையுடைய ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராககள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. 

ரோவர் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளபட உள்ளது. இது நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு  ஒரு சென்டி மீட்டர் தொலைவு செல்லும்.  நிலவின் வேதியியல் கூறுகள், நுண்ணுயிர்கள் உருவாகுமா? போன்றவற்றை ஆய்வு செய்ய Alpha Particle X Ray Spectrometer (APXS) இருக்கிறது.  நிலவின் பாறை, மணல் ஆகியவற்றை ஆய்வு செய்ய  Laser Induced Breakdown Spectroscope (LIBS) என்ற தொழில்நுட்பம் ரோவரில் பொருத்தப்பட்டுள்ளது.

ரோவர் அங்குள்ள ஆற்றலை பயன்படுத்தி அதற்கேற்றவாறு ஆய்வு பணிகளை செய்ய உள்ளது. அதொடு, சூரிய ஆற்றலை பயன்படுத்தி இயங்கும் ரோவர் நிலவின் பகலில் பயணிக்குமாறு திட்டமிட்டப்படி அனுப்பப்பட்டுள்ளது.

நிலாவில் ஒரு நாள் என்பது  பூமியில் 28 நாள்களை குறிக்கிறது.  நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் பகலும், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும். இதனால் அங்கு ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்கு சமமாக பார்க்கப்படுகிறது. இதனால், நிலாவில் பகல் தொடங்கும் காலத்தில் லேண்டர் அங்கு தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை பயன்படுத்தி ரோவர் ஆய்வுகளை மேற்கொள்கிறது. அங்குள்ள பகல் பொழுதுகளை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  14 நாட்கள் இரவு நேரம் வரும்போது, லேண்டர் கருவிக்கு சூரிய ஒளிக் கிடைக்காது.  இரவு நீடிக்கும் 14 நாட்களில் நிலவும் உறைபனிக் குளிர் காரணமாக, கருவிகளின் பாகங்களில் விரிசல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் லேண்டர், ரோவர் செயல்படாமல்போக வாய்ப்புள்ளதால் இந்த திட்டம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ரோவர் மேற்கொள்ளும்  ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால நிலவு மற்றும் விண்வெளி திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். பிரக்யான் ரோவர் நிலவு குறித்து அனுப்பபும் தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள்.  அந்த தரவுகள் லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்படுகிறது. மின்காந்த அலைகளால் அனுப்பப்படும் தரவுகள், ஒருவேளை லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்படும் முயற்சி தோல்வியடைந்தால் சந்திரயான்- 2-இன் ஆர்பிட்டர் உள்ளே நுழைந்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பும். சந்திரயான் -2 இன் ஆர்பிட்டர் சந்திரயான் 3-உடன் தொடர்பில் இருக்கும். ரோவர் ஆய்வு செய்யும் தரவுகள் லேண்டருக்கும் அனுப்பும் அதே நேரத்தில் சந்திரயான் 2வின் ஆர்பிட்டருக்கும் அனுப்பப்படும்.

நிலாவில் உள்ள காலநிலை தரவுகளை பகுப்பாய்வு செய்து அனுப்பும். அதுமட்டுமின்றி, கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளது. ரோவர் மண்ணை குடைந்து, அதிலிருந்து மாதிரிகளை எடுத்து லேசர் மூலம் ஆராய்ந்து பார்க்கும். சந்திரயான் 3 கண்டறியும் ஆய்வுகள் மூலம் இனி விண்வெளி பயணத்திற்கு தேவையான பொருட்களை பூமியில் இருந்தே கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்காது. அதற்கான தளத்தை நிலவிலும் அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் நிலவில் இருக்கும் இயற்கை கனிமங்கள், தனிமங்களை பூமியில் வாழும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.