மேலும் அறிய
Advertisement
விருதுநகரில் கிணற்றில் தள்ளிவிட்டு 4 வயது சிறுவனை கொன்ற 2 சிறுவர்கள் கைது
’’ஆத்திரமடைந்து பிரவீன்குமார், தனது நண்பர் அஜயுடன், சிறுவன் தீனயாளனை அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளிவிட்டதாகவும் பிரவீன்குமார் போலீசில் தெரிவித்துள்ளார்’’
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த விஸ்வநத்தம்-திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (30). இவர் சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணி செய்துவருகிறார். இவருக்கு 8 வயதிலும் மற்றும் 4 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகன் தீனதயாளன் பக்கத்து வீட்டு அருகே மணலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணவில்லை. குடும்பத்தினர் அக்கம் பக்கம் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிவகாசி நகர் காவல்நிலையத்தில் சிறுவன் தீனதயாளனின் தந்தை பார்த்திபன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் உடனடியாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
அப்போது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பக்கத்து வீ்ட்டில் குடியிருக்கும் 13வயது சிறுவன் பிரவீன்குமார், 11 வயது சிறுவன் அஜய் ஆகிய இருவரும் தீனதயாளளை அழைத்துக் கொண்டு செல்வது கேமரா பதிவில் இருந்தது. அதனை தொடர்ந்து பிரவீன்குமார், அஜய் 2 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தீனதயாளன், பிரவீன்குமாரின் வீட்டு முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் விளையாடியதாகவும் அப்போது இரு வீட்டாருக்கும் வாய்த்தகறாறு ஏற்பட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்து பிரவீன்குமார், தனது நண்பர் அஜயுடன், சிறுவன் தீனயாளனை அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளிவிட்டதாகவும் பிரவீன்குமார் போலீசில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தீனதயாளன் உடல் பிரேதமாக மீட்கப்பட்டது.
மேலும் விருதுநகர் மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 480 மில்லி கிராமில் ஈட்டி எறியும் தங்கசிலை- நீரஜ் சோப்ராவுக்கு மரியாதை செய்யும் நகை கலைஞர்...!
சம்பவம் குறித்து பிரவீன்குமார், அஜய் 2 சிறுவர்களையும் சிவகாசி நகர் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட பிரவீன்குமார் திருப்பூரில் 8ம் வகுப்பு படித்து வந்ததும் அஜய் விஸ்வநத்தம் அரசு மேல்நிலைபள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion